search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டொனால்ட் டிரம்ப்
    X
    டொனால்ட் டிரம்ப்

    மிச்சிகன் மாநிலத்தில் வாக்கு எண்ணிக்கையை நிறுத்தவேண்டும் - டிரம்ப் பிரச்சாரக்குழு மனு

    மிச்சிகன் மாநிலத்தில் வாக்கு எண்ணிக்கையை நிறுத்தவேண்டும் எனக்கோரி டிரம்ப் பிரச்சாரக் குழு மனுதாக்கல் செய்துள்ளது.
    வாஷிங்டன்:

    அமெரிக்க அதிபர் தேர்தல் நிறைவு பெற்று தற்போது வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. தற்போதைய நிலவரப்படி ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடன் 248 வாக்குகளும், குடியரசு கட்சி வேட்பாளர் டிரம்ப் 214 வாக்குகளும் பெற்றுள்ளனர்.

    அதிபரை தேர்வு செய்ய அமெரிக்காவில் மொத்தம் உள்ள 50 மாநிலங்களில் 538 தேர்வாளர்கள் (பிரதிநிதிகள்) உள்ளனர். இவர்களில் 270 பேரின் வாக்குகளை பெறும் வேட்பாளரே அமெரிக்க அதிபராக தேர்வாக முடியும். 
    இதுவரை நடந்து முடிந்துள்ள வாக்கு எண்ணிக்கையின் அடிப்படையில் ஜோ பைடன் முன்னிலை வகித்து வருகிறார்.

    வாக்கு எண்ணிக்கையின் போது இழுபறி நீடித்து வந்த விஸ்காசின் மாகாணத்தில் ஜோ பைடன் வெற்றி பெற்றுள்ளார். மேலும் மிச்சிகன் மாகாணத்திலும் ஜோ பைடன் தரப்பு முன்னிலை வகிக்கிறது.

    இந்நிலையில் குடியரசு கட்சியின் பிரச்சாரக்குழு தலைவர் பில் ஸ்டீஃபன் கூறுகையில், விஸ்காசின் மாகாணத்தில் வாக்கு எண்ணிக்கையின் போது பல இடங்களில் முறைகேடுகள் நடந்ததாக தகவல்கள் வந்துள்ளன. அவை முடிவுகளின் தன்மை குறித்து கடுமையான சந்தேகங்களை எழுப்புகின்றன.

    மிச்சிகன் மாகாணத்தில் வாக்கு எண்ணிக்கையை பார்வையிட டிரம்ப் கட்சியினருக்கு அனுமதி வழங்கப்படவில்லை. மிச்சிகன் மாகாணத்தில் மீதம் உள்ள இடங்களில் வாக்கு எண்ணிக்கையை பார்வையிட தங்களுக்கு அனுமதி வழங்கும் வரை வாக்கு எண்ணுவதை நிறுத்தி வைக்க வேண்டும் என்று நீதிமன்றத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.

    நியாயமான முறையில் வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட வேண்டும் எனவும், அதனை பார்வையிட தங்களுக்கு அனுமதி வழங்க வேண்டும். மேலும் விஸ்காசின் மாகாணத்தில் மறு வாக்கு எண்ணிக்கை நடத்த கோரிக்கை விடுக்கப் போவதாகவும் டிரம்ப் பிரச்சாரக்குழு தெரிவித்துள்ளது.
    Next Story
    ×