search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    ஜெர்மனியில் கொரோனா பாதிப்பு 5 லட்சத்தை கடந்தது

    ஜெர்மனியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5 லட்சத்தை கடந்துள்ளது.
    பெர்லின்:

    ஜெர்மனியில் கொரோனா வைரஸ் தொற்றின் 2-வது அலை நீச தொடங்கியுள்ளது. அங்கு கடந்த சில நாட்களாகவே கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 1 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    இந்த நிலையில் ஜெர்மனியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5 லட்சத்தை கடந்துள்ளது.

    இதுகுறித்து அந்த நாட்டு சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் ‘ஜெர்மனியில் கடந்த 24 மணி நேரத்தில் 19,059 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து ஜெர்மனியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5,18,753 ஆக அதிகரித்துள்ளது. மேலும், இதுவரை 10,452 பேர் பலியாகி உள்ளனர்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    “நாம் ஆபத்தான கட்டத்தில் இருக்கிறோம். தொடர்ந்து கொரோனா தொற்றை கட்டுப்படுத்த கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன” என்று ஜெர்மனி அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    Next Story
    ×