search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    ஸ்பெயினில் கொரோனா கட்டுப்பாடுகளுக்கு எதிரான போராட்டத்தில் வன்முறை

    ஸ்பெயினில் கொரோனா கட்டுப்பாடுகளுக்கு எதிரான போராட்டத்தில் போராட்டக்காரர்களுக்கும், போலீசாருக்கும் இடையே பயங்கர மோதல் உண்டானது.
    பார்சிலோனா:

    ஸ்பெயின் நாட்டில் கொரோனாவை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன. வணிக வளாகங்கள், சினிமா தியேட்டர்கள், கலாசார மையங்கள், ஓட்டல்கள் மூடப்பட்டு உள்ளன. தனிமைப்படுத்துதல் நடவடிக்கைகளும் கடுமையாக்கப்பட்டு உள்ளன.

    இதை கண்டித்து பார்சிலோனா நகரில் பிரமாண்ட பேரணி நடந்தது. சுமார் 1,500 பேர் வரை பங்கேற்ற இந்த பேரணியின் இறுதியில், திடீரென வன்முறை வெடித்தது. போராட்டக்காரர்கள் புகை குண்டுகள் மற்றும் பட்டாசுகளை போலீசாரை நோக்கி வீசினர். இதனால் போராட்டக்காரர்களுக்கும், போலீசாருக்கும் இடையே பயங்கர மோதல் உண்டானது.

    போராட்டக்காரர்களை ஒடுக்கிய போலீசார் 2 பேரை கைது செய்தனர்.
    Next Story
    ×