search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கரடி மூலம் நடத்தப்பட்ட கணிப்பு
    X
    கரடி மூலம் நடத்தப்பட்ட கணிப்பு

    அமெரிக்க அதிபர் தேர்தல்: வெற்றியாளரை ஒரே மாதிரியாக கணித்த ரஷிய விலங்கியல் பூங்கா விலங்குகள்

    அமெரிக்க அதிபர் தேர்தலில் யார் வெற்றியாளர் என ரஷ்ய விலங்கியல் பூங்காவில் உள்ள கரடி மற்றும் புலிகள் ஒரே மாதிரியாக கணித்துள்ளன.
    மாஸ்கோ:

    அமெரிக்காவில் வருகிற நவம்பர் 3ந்தேதி அதிபர் தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் டொனால்டு டிரம்ப் மற்றும் ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ஜோ பிடன் இடையே கடும் போட்டி நிலவுகிறது.

    அதிபர் தேர்தலில் ரஷிய நாட்டின் தலையீடு உள்ளது என்ற நீண்டகால சர்ச்சை எழுந்திருந்த நிலையில் அது புறந்தள்ளப்பட்டது.  

    இந்நிலையில், ரஷியாவின் விலங்கியல் பூங்காவில் உள்ள சைபீரிய கரடி ஒன்று அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெறும் வேட்பாளரை கணித்துள்ளது.

    இதுபற்றிய வீடியோ ஒன்றில், கூண்டில் இருந்து திறந்து விடப்பட்ட கரடியானது, ஒய்யார நடைநடந்து வெளியே வருகிறது. அதற்கு முன் தயாராக இரண்டு தர்பூசணி பழங்கள் வைக்கப்பட்டு இருந்தன. அவற்றில் ஒரு பழத்தில் தற்போதைய அதிபர் டிரம்பின் உருவமும், மற்றொன்றில் ஜோ பிடன் உருவமும் வரையப்பட்டிருந்தது. 

    இதில், கரடி நேராக வந்து ஜோ பிடன் உருவம் கொண்ட தர்பூசணியை தூக்கி சென்று மறைவாக அமர்ந்து சுவைத்தது. இதேபோல் புலிகள் மூலம் நடத்தப்பட்ட  கணிப்புகளிலும் ஜோ பிடன் வெற்றி பெறுவார் என்றே தெரியவந்துள்ளது.

    இதனால் அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பிடன் வெற்றி பெறுவார் என நம்பப்படுகிறது.
    Next Story
    ×