search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா வைரஸ்
    X
    கொரோனா வைரஸ்

    ஸ்பெயினில் மேலும் 23,580 பேருக்கு கொரோனா பாதிப்பு

    ஸ்பெயினில் கொரோனா வைரசால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 12.38 லட்சத்தைத் தாண்டியுள்ளது.
    பியூனோஸ் ஐர்ஸ்:

    சீனாவின் வுகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது உலகின் 210 நாடுகளுக்கு மேல் பரவியுள்ள இந்த வைரஸ் பெரும் மனித இழப்புகளை ஏற்படுத்தி வருகிறது.

    உலக அளவில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் பட்டியலில் ஸ்பெயின் 6-வது இடத்தில் உள்ளது.
     
    இந்நிலையில், ஸ்பெயினில் மேலும் 23,580 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், அங்கு கொரோனா வைரசால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 12,38 லட்சத்தைக் கடந்துள்ளது.
     
    ஒரே நாளில் 173 பேர் உயிரிழந்துள்ள நிலையில், அங்கு கொரோனாவால் பலியானோர் எண்ணிக்கை 35 ஆயிரத்து 639 ஆக உள்ளது.
    Next Story
    ×