search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    அமெரிக்க தேர்தல் வாக்கு பெட்டியில் தீ - சதியா? என விசாரணை

    அமெரிக்க மசாசுசெட்ஸ் மாகாணம் பாஸ்டன் நகரில் வாக்குச்சீட்டு போடும் பெட்டியில் தீப்பிடித்துக்கொண்டது தொடர்பாக விசாரணை நடத்த முடிவு.
    பாஸ்டன்:

    அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் நவம்பர் 3-ந் தேதி நடக்கிறது. இருப்பினும், கொரோனா அச்சம் காரணமாக, சுமார் 6 கோடி பேர் முன்கூட்டியே வாக்களித்து விட்டனர். வாக்காளர்களுக்காக தபால் ஓட்டு வசதியுடன், முக்கிய இடங்களில் வாக்குச்சீட்டை போடும் பெட்டிகளும் வைக்கப்பட்டுள்ளன.

    இந்த நிலையில், மசாசுசெட்ஸ் மாகாணம் பாஸ்டன் நகரில் வாக்குச்சீட்டு போடும் பெட்டியில் தீப்பிடித்துக்கொண்டது. அங்குள்ள பொது நூலகத்துக்கு வெளியே இப்பெட்டி வைக்கப்பட்டு இருந்தது. அப்போது, பெட்டியில், 122 வாக்குச்சீட்டுகள் இருந்தன. அவற்றில் 87 சீட்டுகள் தீயில் கருகவில்லை.

    இது, திட்டமிட்ட தாக்குதலாக இருக்கும் என்று மாகாண தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தனர். எனவே, எப்.பி.ஐ. விசாரணை நடத்த கேட்டுக்கொண்டுள்ளனர்.

    மேலும், தீயில் சேதமடைந்த வாக்குச்சீட்டுகளுக்கு பதிலாக, சம்பந்தப்பட்ட வாக்காளர்கள் நேரில் வந்து வாக்களிக்கலாம் அல்லது அவர்களுக்கு தபால் வாக்குச்சீட்டு அனுப்பி வைக்கப்படும் என்று தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தனர். வாக்காளர்கள் புதிய சீட்டை சமர்ப்பிக்காவிட்டால், சேதமடைந்த சீட்டுகளே முடிந்தவரை எண்ணப்படும் என்றும் அவர்கள் கூறினர்.
    Next Story
    ×