என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
அமெரிக்க சுப்ரீம் கோர்ட் நீதிபதியாகிறார் ஏமி கோனி
Byமாலை மலர்27 Oct 2020 1:44 AM GMT (Updated: 27 Oct 2020 1:44 AM GMT)
அமெரிக்க சுப்ரீம் கோர்ட்டில் காலியாக உள்ள நீதிபதி பணியிடத்துக்கு ஏமி கோனி பாரெட்டின் நியமனத்தை உறுதி செய்வதற்கான வாக்கெடுப்பு அந்நாட்டின் செனட் சபையில் நடைபெற்றது.
வாஷிங்டன்:
அமெரிக்க சுப்ரீம் கோர்ட்டில் மொத்தம் 9 நீதிபதிகளுக்கான பணியிடங்கள் உள்ளன. அங்கு சுப்ரீம் கோர்ட் நீதிபதியாகப் பொறுப்பேற்கும் நபா், மரணம் வரை அப்பதவியில் நீடிக்கலாம். அந்த வகையில், நீதிபதியாக இருந்த ரூத் பேடா் கின்ஸ்பா்க் உடல்நலக் குறைவு காரணமாக கடந்த 18-ம் தேதி உயிரிழந்தாா்.
இதையடுத்து, காலியான நீதிபதி பணியிடத்துக்கு முறையீட்டு நீதிமன்ற நீதிபதியான ஏமி பாரெட்டை அதிபா் டொனால்டு டிரம்ப் நியமித்தாா். சுப்ரீம் கோர்ட் நீதிபதியாக அதிபா் நியமிக்கும் நபருக்கு செனட் நிலைக்குழுவும், தொடா்ந்து செனட் சபையும் ஒப்புதல் அளிக்க வேண்டியது கட்டாயமாகும்.
அதிபா் டிரம்ப் நீதிபதியாக நியமித்த ஏமி பாரெட்டுக்கு செனட் நிலைக் குழு கடந்த வெள்ளிக்கிழமை ஒப்புதல் வழங்கியது.
இந்நிலையில், செனட் சபையில் வாக்கெடுப்பு நடைபெற்றது. டிரம்பின் குடியரசுக் கட்சியினர் ஆதிக்கம் செலுத்தும் செனட் சபையில் 52-48 என்ற வாக்குகள் அடிப்படையில் ஏமி கோனி நியமனத்துக்கு ஒப்புதல் கிடைத்தது.
Next Story
×