search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா வைரஸ்
    X
    கொரோனா வைரஸ்

    வங்காளதேசத்தில் 4 லட்சத்தைத் தாண்டியது கொரோனா பாதிப்பு

    வங்காளதேசத்தில் ஒரே நாளில் 1,436 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதை தொடர்ந்து, அங்கு பாதிப்பு எண்ணிக்கை 4 லட்சத்தைத் தாண்டியது.
    டாக்கா:

    கொரோனா வைரசின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றால் 4 கோடிக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். வைரஸ் தொற்றுக்கு இதுவரை 11 லட்சத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்
     
    உலக அளவில் கொரோனா பாதிப்பில் வங்காளதேசம் 18-வது இடத்தில் உள்ளது.

    வங்காளதேசத்திலும் கொரோனா வைரஸ் வேகமாகப் பரவி வருகிறது. தற்போதைய நிலவரப்படி அந்நாட்டில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 4 லட்சத்தைத் தாண்டியது.
     
    இந்நிலையில், வங்காளதேசத்தில் நேற்று ஒரே நாளில் 1,436 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, அங்கு பாதிப்பு எண்ணிக்கை 4,00,251 ஆக அதிகரித்துள்ளது. மேலும், அங்கு வைரஸ் தாக்குதலுக்கு 15 பேர் பலியானதை தொடர்ந்து, உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 ஆயிரத்து 818 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவில் இருந்து 3.16 லட்சத்துக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர் என அந்நாட்டு சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
    Next Story
    ×