என் மலர்
செய்திகள்
X
கொரோனா இரண்டாம் அலை -ஸ்பெயினில் தேசிய அவசரநிலை பிரகடனம்
Byமாலை மலர்26 Oct 2020 12:51 PM IST (Updated: 26 Oct 2020 12:51 PM IST)
ஸ்பெயினில் கொரோனா நோய்த்தொற்று பரவலை குறைக்க அந்நாட்டு அரசு அவசர நிலையை பிரகடனம் செய்துள்ளது.
மாட்ரிட்:
ஸ்பெயின் நாட்டில் கடந்த சில தினங்களாக கொரோனா வைரஸ் பரவலின் இரண்டாவது அலை அதிகரிக்க தொடங்கியிருக்கிறது. நாட்டில் இதுவரை 11,10,372 பேருக்கு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 35 ஆயிரத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில், ஸ்பெயினில் கொரோனா பரவலை குறைக்க அந்நாட்டு அரசு தேசிய அவசரநிலை உத்தரவை பிறப்பித்துள்ளது. அதன்படி, மாநிலங்களுக்கு இடையேயான போக்குவரத்து ரத்து செய்யப்படும். கனாரி தீவை தவிர இந்த அவசரநிலை மற்ற அனைத்து இடங்களுக்கும் பொருந்தும்.
இரவு நேரங்களில் முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்படும் என அந்நாட்டின் பிரதமர் பெட்ரோ சன்செஸ் தெரிவித்துள்ளார்.
நாம் கடந்து வரும் நிலைமை தீவிரமானது என்றும், இந்த புதிய அவசரகால நிலை மே மாத தொடக்கம் வரை நீடிக்கும் என்றும் பிரதமர் தனது தொலைக்காட்சி உரையில் தெரிவித்தார்.
Next Story
×
X