search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாகிஸ்தானுக்கு எதிராக நடந்த ஆர்ப்பாட்டம்
    X
    பாகிஸ்தானுக்கு எதிராக நடந்த ஆர்ப்பாட்டம்

    கனடாவில் பாகிஸ்தானுக்கு எதிராக புலம்பெயர் இந்தியர்கள் ஆர்ப்பாட்டம்

    பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் பாகிஸ்தானுக்கு எதிராக கனடாவில் புலம்பெயர் இந்தியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    டொரன்டோ:

    ஒருங்கிணைந்த காஷ்மீர் மீது பாகிஸ்தான் 1947 ஆம் ஆண்டு அக்டோபர் 22-ம் தேதி படையெடுத்தது. இந்த படையெடுப்பின்போது காஷ்மீரின் பல்வேறு பகுதிகளை பாகிஸ்தான் ஆக்கிமித்துவந்தது. இதனால், காஷ்மீர் மன்னரான ராஜா ஹரிசிங் இந்தியாவுடன் கைகோர்த்தார். 

    இதையடுத்து, இந்தியா-பாகிஸ்தான் இடையே காஷ்மீரை மையமாக கொண்டு முதல் போர் ஏற்பட்டது. 1948 வரை நீடித்த இந்த சண்டை 1949 ஆம் ஆண்டு போர் நிறுத்த ஒப்பந்தம் மூலம் முடிவுக்கு வந்தது. இந்த போரில் ஒருங்கிணைந்த காஷ்மீரின் பல பகுதிகளை பாகிஸ்தான் ஆக்கிரமித்தது. அந்த பகுதிகள் தற்போதுவரை பாகிஸ்தானின் கட்டுப்பாட்டில் உள்ளது.  பாகிஸ்தான் படையெடுத்த நாள் ஜம்மு காஷ்மீரின் கருப்பு தினமாக அமைந்தது. 

    இந்நிலையில் காஷ்மீர் மீது பாகிஸ்தான் படையெடுத்து 73 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இதனை நினைவுகூரும் வகையில் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் முசாபராபாத் மற்றும் மீர்பூர் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த 22ம் தேதி கருப்பு நாளாக அனுசரிக்கப்பட்டு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    இதேபோல் கனடாவின் டொரன்டோ நகரில், புலம்பெயர்ந்த இந்தியர்கள் திரண்டு பாகிஸ்தானுக்கு எதிராக நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். காஷ்மீர் மீதான பாகிஸ்தான் படையெடுப்பை கருப்பு தினமாக அனுசரித்தும், பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் பாகிஸ்தானுக்கு எதிராகவும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

    இதில் புலம்பெயர்ந்த இந்தியர்கள் பலர் கலந்துகொண்டு பாகிஸ்தானுக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பினர். கோரிக்கை மற்றும் பாகிஸ்தானுக்கு எதிரான வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தியிருந்தனர்.

    ஒற்றுமையை வெளிப்படுத்தும் வகையில், கனடாவின் பலூச் மனித உரிமைகள் கவுன்சில் உறுப்பினர்களும் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர்.
    Next Story
    ×