search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா வைரஸ்
    X
    கொரோனா வைரஸ்

    அமெரிக்காவை விடாத கொரோனா - ஒரே நாளில் 76 ஆயிரம் பேர் பாதிப்பு

    அமெரிக்காவில் கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்து வருகிறது. அங்கு ஒரே நாளில் 76 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு அடைந்துள்ளனர்.
    வாஷிங்டன்:

    சீனாவில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவி வருகிறது. உலகில் 210 நாடுகளுக்கு மேல் பரவியுள்ள இந்த வைரஸ் பெரும் உயிரிழப்புகளை ஏற்படுத்தி வருகிறது. கொரோனா வைரசின் தாக்கம் அமெரிக்காவில் தீவிரமடைந்து வருகிறது.

    இந்நிலையில், அமெரிக்காவில் கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்து வருகிறது. அங்கு ஒரே நாளில் 76 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு அடைந்துள்ளனர்.

    இதையடுத்து, அங்கு கொரோனா தொற்றால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 88 லட்சத்தைக் கடந்துள்ளது.

    மேலும், ஒரே நாளில் 750க்கும் அதிகமானோர் உயிரிழந்த நிலையில் அங்கு கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு பலியானோர் எண்ணிக்கை 2 லட்சத்து 30 ஆயிரத்தைக் கடந்துள்ளது. கொரோனாவில் இருந்து விடுபட்டோர் எண்ணிக்கை 57.35 லட்சத்தை கடந்துள்ளது. தற்போது வரை 28.58 லட்சத்துக்கும் அதிகமானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
    Next Story
    ×