search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    இலங்கையில் மீன்சந்தைக்கு சென்று வந்தவர்களுக்கு கொரோனா - ஒரே நாளில் 865 பேருக்கு வைரஸ் பாதிப்பு

    இலங்கையில் ஒரே நாளில் அதிகபட்சமாக 865 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
    கொழும்பு:

    உலக நாடுகளையெல்லாம் உலுக்கி வரும் கொரோனா வைரஸ் பெருந்தொற்று, இலங்கையையும் விட்டு வைக்கவில்லை. அங்கு நேற்று முன்தினம் ஒரே நாளில் அதிகபட்சமாக 865 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

    பெலியகோடா மீன் சந்தைக்கு சென்றவர்கள் மூலம் திரிகோணமலை, பொத்துவில், கல்முனை, மட்டக்களப்பு போன்ற பகுதியில் உள்ளவர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன. நேற்று முன்தினம் பாதிப்புக்குள்ளான 865 பேரில் பெரும்பாலோர் இவர்கள்தான்.

    இலங்கையில் கொரோனா பாதிப்புக்கு ஆளானோரின் மொத்த எண்ணிக்கை என்பது 7,153 ஆக உயர்ந்துள்ளது.

    இந்த நிலையில் இலங்கை மக்கள் அனைவரும் முக கவசம் அணிய வேண்டும், தனி மனித இடைவெளியை பின்பற்ற வேண்டும், சானிடைசர் திரவம் கொண்டு கைகளை சுத்தம் செய்து பராமரிக்க வேண்டும் என்று சுகாதார அமைச்சகம் கேட்டுக்கொண்டுள்ளது. இதை மீறுவோருக்கு 54 அமெரிக்க டாலர் (சுமார் ரூ.4 ஆயிரம்) அபராதம் அல்லது 6 மாதம் சிறைத்தண்டனை விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
    Next Story
    ×