search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சூரியன் கருப்பு புள்ளி
    X
    சூரியன் கருப்பு புள்ளி

    சூரியனில், பூமியை விட பெரிதான கருப்பு புள்ளி - சார்ஜா விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு

    சார்ஜாவில் வானியல், விண்வெளி அறிவியல் தொழில்நுட்ப மையத்தின் ஆராய்ச்சியாளர்கள் சூரியனில் பூமியை விட பெரிதான கருப்பு புள்ளி ஒன்று உருவாகி உள்ளதை நேற்று கண்டுபிடித்துள்ளனர்.
    சார்ஜா:

    சார்ஜாவில் வானியல், விண்வெளி அறிவியல் தொழில்நுட்ப மையத்தின் ஆராய்ச்சியாளர்கள் சூரியனில் பூமியை விட பெரிதான கருப்பு புள்ளி ஒன்று உருவாகி உள்ளதை நேற்று கண்டுபிடித்துள்ளனர்.

    இது குறித்து சார்ஜா விண்வெளி ஆராய்ச்சி கண்காணிப்பு மையத்தின் உதவி ஆராய்ச்சியாளர் முகம்மது தலபா கூறியதாவது:-

    சூரியனில் கருப்பு புள்ளி என்றால் அது உண்மையில் கருப்பான நிறத்தில் காணப்படும் புள்ளி அல்ல. சூரியனின் மேற்பரப்பில் மற்ற இடங்களைக் காட்டிலும் ஓரிடத்தில் வெப்பம் குறைவாக இருந்தால் அந்த இடம் வெகு தொலைவில் நமக்கு கரும் புள்ளியாக தெரிகிறது.

    கருப்பு புள்ளியை சுற்றி உள்ள இடத்தில் வெப்பம் 6 ஆயிரம் டிகிரி செல்சியஸ் வெப்பநிலை உள்ளது என்றால் புள்ளி உள்ள இடத்தில் வெப்பம் சுமார் 4 ஆயிரத்து 200 டிகிரி செல்சியஸ் அளவுக்கு இருக்கலாம். பொதுவாக இதுபோன்ற சூரிய புள்ளிகள் 11 ஆண்டுகால இடைவெளியில் தோன்றுகிறது.

    தற்போது பூமியை விட பெரிய அளவிலான கருப்பு புள்ளியை சார்ஜா விஞ்ஞானிகள் கண்டுபிடித்து சாதனை புரிந்துள்ளனர். இந்த சூரிய புள்ளிகளை ரேடியோ டெலஸ்கோப் எனப்படும் சிறப்பு தொலைநோக்கி கருவிகள் மூலம் ஆய்வு செய்ததில் பூமியை விட பெரிதான அளவில் உள்ளது என தெரியவந்துள்ளது. இந்த கருப்பு புள்ளிக்கு சைக்கிள் 25 என பெயரிடப்பட்டுள்ளது.

    வருகிற 2022-ம் ஆண்டில் இந்த சூரிய புள்ளிகள் பூமியில் சில விளைவுகளை ஏற்படுத்தலாம். அதாவது பூமியின் சுற்றுவட்டப்பாதையில் உள்ள செயற்கைக்கோள்கள் இந்த கருப்பு புள்ளியால் ஏற்படும் சூரிய புயலால் சேதமடைய கூடும். இதுபோல் தோன்றிய சூரிய புயலால் கடந்த 2003-ம் ஆண்டில் பூமியின் தாழ்வான வட்டப்பாதையில் சுற்றிக்கொண்டு இருந்த 2 செயற்கைக்கோள்கள் சேதமடைந்தது. இதுவரை இதுபோன்ற விளைவுகளால் 28 செயற்கைக்கோள்கள் சேதமடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    மேலும் பூமியில் உள்ள கரும்புள்ளிகள் அதிகரித்துக் காணப்படும் கால கட்டத்தில் சூரியனில் ஏற்படும் அதிர்வலைகள் காரணமாக மனிதன் உருவாக்கிய செயற்கை அமைப்புகளில் பாதிப்பு ஏற்படும் என்பதால் விஞ்ஞானிகள் அதன் மீது ஒரு கண்ணை எப்போதும் வைத்துள்ளனர். தற்போது கண்டுபிடிக்கப்பட்ட இந்த கருப்பு புள்ளி சூரியனில் கதிர்வீச்சின் செயல்பாடு அதிகரித்துள்ளதை காட்டுகிறது.
    Next Story
    ×