search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    தென்கொரியாவில் காய்ச்சல் தடுப்பூசி போட்ட 17 பேர் பலி

    தென்கொரியாவில் பருவ காய்ச்சல் (புளூ) தடுப்பூசி போட்டுக்கொண்ட 17 பேர் பரிதாபமாக உயிரிழந்து இருப்பதாக அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன
    சியோல்:

    தென்கொரியாவில் பருவ காய்ச்சல் (புளூ) தடுப்பூசி போட்டுக்கொண்ட 17 பேர் பரிதாபமாக உயிரிழந்து இருப்பதாக அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன. இது அங்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    கடைசியாக நேற்று காலையில் இஞ்சியான் நகரில் தடுப்பூசி போட்டுக்கொண்ட 74 வயது மனிதர் இறந்து இருக்கிறார்.

    இதுபற்றி தென்கொரிய அரசு அதிகாரிகள் கூறும்போது, “தடுப்பூசி போட்டுக்கொண்டதால் இறந்ததாக கூறப்படுகிற 9 சந்தேக மரணங்கள் குறித்து விசாரித்தோம். அதில் தடுப்பூசி போட்டுக்கொண்டதற்கும், உயிரிழப்புக்கும் தொடர்பு இல்லை என தெரிய வந்துள்ளது. தடுப்பூசி போட்டுக்கொண்டதால் ஏற்பட்ட தீவிர ஒவ்வாமை எதிர்வினையால் இறப்பு நேர்ந்திருக்கக்கூடும் என சொல்லப்படுகிறது. ஆனால் இது உறுதி செய்யப்படவில்லை” என தெரிவித்தனர்.

    தென்கொரியாவில் பருவ காய்ச்சலுக்கு எதிராக 1 கோடியே 29 லட்சத்துக்கும் அதிகமானோர் தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
    Next Story
    ×