search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஏவுகணைகளுடன்  போர் விமானம் (கோப்பு படம்)
    X
    ஏவுகணைகளுடன் போர் விமானம் (கோப்பு படம்)

    சீனாவுடனான பதற்றத்திற்கு மத்தியில் தைவானுக்கு ஆயுதங்களை விற்பனை செய்யும் அமெரிக்கா

    சீனாவுடனான பதற்றத்திற்கு மத்தியில் 100 கோடி டாலர் மதிப்பிலான ஆயுதங்களை தைவானுக்கு அமெரிக்கா விற்பனை செய்கிறது.
    வாஷிங்டன்:

    கடந்த சில மாதங்களாக தைவானுக்கும் சீனாவுக்கும் இடையிலான மோதல் அதிகரித்து வருகிறது. எந்த நேரத்திலும் சீனா தைவான் மீது தாக்குதல் நடத்தலாம் என கூறப்படுகிறது. இந்த நிலையில் வானத்தில் இருந்து தரையில் உள்ள இலக்குகளை தாக்கி அழிக்கும் ஏவுகணைகள் மற்றும் பிற ஆயுத அமைப்புகள் ஆகியவைகளை விற்க 1 பில்லியன் டாலர் (ரூ.7329 கோடி) மதிப்புள்ள ஒப்பந்தம் செய்திருப்பதாக அமெரிக்க வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.

    அமெரிக்கா தனது கூட்டாளியான தைவானுக்கு ஏஜிஎம்-84எச், எஸ்எல்ஏஎம்-ஈஆர் ஏவுகணைகள் ஆறு,எம்.எஸ்-110 விமான உளவு கண்காணிப்பு கருவிகள் மற்றும் ஏவுகணைகளுடன் 11 எம்142 மொபைல் லைட் ராக்கெட் வழங்குகிறது.

    எஸ்எல்ஏஎம்-ஈஆர் ஏவுகணைகள் தைவானின் தற்போதைய மற்றும் எதிர்கால அச்சுறுத்தல்களுக்கு உதவும், ஏனெனில் இது அனைத்து வானிலையிலும் பகல் மற்றும் இரவு நேரத்தில், தரையில் அல்லது கடல் மேற்பரப்பில் நகரும் மற்றும் நிலையான இலக்குகளுக்கு எதிராக துல்லியமான தாக்குதலை நடத்தும்  திறன்களை கொண்டது.

    "இந்த ஆயுத விற்பனை இந்தோ-பசிபிக் பிராந்தியம் மற்றும் தைவான் நீரிணையின் பாதுகாப்பு நிலைப்பாட்டிற்கு அமெரிக்கா மிகுந்த முக்கியத்துவத்தை அளிக்கிறது என்பதைக் காட்டுகிறது, மேலும் நமது ஒட்டுமொத்த பாதுகாப்பு திறன்களை வலுப்படுத்துவதில் நம் நாட்டுக்கு தீவிரமாக உதவுகிறது" என்று தைவானின் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
    Next Story
    ×