search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    துபாயில் இருந்து கோழிக்கோட்டிற்கு ஆசனவாயில் மை-றைத்து கடத்தி செல்லப்பட்ட 481 கிராம் எடையுள்ள தங்க கட்டிகள்.
    X
    துபாயில் இருந்து கோழிக்கோட்டிற்கு ஆசனவாயில் மை-றைத்து கடத்தி செல்லப்பட்ட 481 கிராம் எடையுள்ள தங்க கட்டிகள்.

    துபாயில் இருந்து கேரளாவுக்கு கடத்தல்- 675 கிராம் தங்கம் பறிமுதல்

    துபாயில் இருந்து கேரளாவுக்கு கடத்தி வரப்பட்ட 675 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து உள்ளனர்.
    துபாய்:

    அமீரகத்தில் இருந்து ஏற்கனவே இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் தங்கத்தை கடத்தியவர்கள் பிடிபட்டு வருகின்றனர். குறிப்பாக கேரளா, தமிழ்நாட்டில் தங்கம் கொண்டு செல்பவர்கள் சுங்கத்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதில் நேற்று கேரளாவின் கோழிக்கோடு மற்றும் கொச்சி விமான நிலையங்களில் அடுத்தடுத்து கடத்தல் தங்கம் பிடிபட்டுள்ளது.

    துபாயில் இருந்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் கோழிக்கோட்டிற்கு சென்ற விமான பயணியிடம் 481 கிராம் எடையுள்ள தங்ககட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டது. இதன் மதிப்பு சுமார் ரூ.22 லட்சத்து 12 ஆயிரத்து 600 ஆகும். இவர் 4 கேப்சூல் பொட்டலங்களாக தனது ஆசனவாயில் மறைத்து எடுத்து சென்றபோது சுங்கத்துறை அதிகாரிகளிடம் பிடிபட்டார்.

    அதேபோல் துபாயில் இருந்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் மூலம் கொச்சி சென்ற பயணியிடம் சோதனை செய்ததில் தனது உள்ளாடையில் மறைத்து வைத்த 24 காரட்டிலான 194 கிராம் எடையுள்ள செயின் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதன் மதிப்பு சுமார் ரூ 8 லட்சத்து 86 ஆயிரம் ஆகும்.

    தங்கத்தை கடத்திய நபர்களை சுங்கத்துறை அதிகாரிகள் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தியாவில் 18 சதவீதம் ஜி.எஸ்.டி. வரி செலுத்த வேண்டும் என்பதால் தங்கத்தை குறைந்த விலையில் அதிக லாபத்தை சம்பாதிப்பதற்காக சட்ட விரோதமாக தங்கம் கடத்தப்படுகிறது. இந்த தங்க கடத்தலை தடுப்பதற்காக அமீரக இந்திய அதிகாரிகள் இணைந்து கூட்டாக நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

    குறிப்பாக இந்த கடத்தலுக்கு காரணமாக உள்ளவர்களை பிடிக்க நடவடிக்கை எடுக்க முயற்சி எடுக்கப்பட்டு வருவதாக இந்திய சுங்கத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். கடந்த 2 வாரங்களில் தொடர்ந்து சுங்கத்துறையினர் துபாயில் இருந்து செல்லும் பயணிகளிடம் தங்கத்தை பறிமுதல் செய்து வருவது தொடர்கதையாக உள்ளது.
    Next Story
    ×