search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    அமெரிக்க வெளியுறவுத்துறை, பாதுகாப்புத்துறை மந்திரிகள் விரைவில் இந்தியா வருகை

    அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி மைக் பம்பியோ மற்றும் பாதுகாப்புத்துறை செயளர் மார்க் எஸ்பெர்க் வரும் 26-ம் தேதி இந்தியா வருகை புரிகின்றனர்.
    வாஷிங்டன்:

    தென்சீன கடல் விவகாரம் தொடங்கி கொரோனா என பல்வேறு விவகாரங்களில் அமெரிக்காவுக்கும், சீனாவுக்கு இடையே மோதல் நிலவி வருகிறது. 

    சீனாவுடன் மோதல் அதிகரித்துள்ளதால் ஆசியாவில் சீனாவுடன் மோதலில் ஈடுபட்டு வரும் நாடுகளுக்கு அமெரிக்கா ஆதரவு அளித்து வருகிறது.

    இதை உறுதி செய்யும் வகையில், இந்தியா, தைவான் போன்ற நாடுகளுடன் அமெரிக்கா நெருக்கம் காட்டி வருகிறது. இதற்கிடையில், லடாக் விவகாரத்தில் இந்தியா-சீனா இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. 

    இந்த விவகாரத்தில் இந்தியாவுக்கு அமெரிக்கா ஆதரவு அளித்து வருகிறது. மேலும், அமெரிக்காவுக்கு ஆதரவான நிலைப்பாட்டையே அமெரிக்கா எடுத்து வருகிறது.

    இந்நிலையில், இரு நாட்டு உறவையும் வலுப்படுத்தும் விதமாக இருநாட்டு பாதுகாப்பு மற்றும் வெளியுறவுத்துறை மந்திரிகள் மட்டத்திலான பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. 

    இதற்காக அரசுமுறை பயணமாக அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி மைக் பாம்பியோ மற்றும் அமெரிக்க பாதுகாப்புத்துறை மந்திரி மார்க் எஸ்பெர்க் ஆகியோர் வரும் 26 ஆம் தேதி இந்தியா வர உள்ளனர்.

    இந்த பயணத்தின்போது வரும் 27-ம் தேதி மைக் பாம்பியோ மற்றும் மார்க் எஸ்பெர்க் ஆகியோர் இந்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் மற்றும் வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கரை சந்திக்கின்றனர். இந்த சந்திப்பின்போது இரு நாட்டு உறவை மேம்படுத்தல், சர்வதேச விவகாரங்கள், தென் சீன கடல் பரப்பு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து இருநாட்டு மந்திரிகளும் ஆலோசனை நடத்த உள்ளனர்.

    சீனாவுடன் மோதல் அதிகரித்துள்ள இந்த சூழ்நிலையில் இந்தியா-அமெரிக்க பாதுகாப்பு, வெளியுறவுத்துறை மந்திகள் மட்டத்திலான கூட்டம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருத்தப்படுகிறது. 
    Next Story
    ×