search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விசா விண்ணப்பம் வாங்க குவிந்த மக்கள்
    X
    விசா விண்ணப்பம் வாங்க குவிந்த மக்கள்

    பாகிஸ்தான் தூதரகத்தில் கூட்ட நெரிசல் -பெண்கள் உள்ளிட்ட 15 பேர் பலி

    ஆப்கானிஸ்தானில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி பெண்கள் உள்ளிட்ட 15 பலியானார்கள்
    காபூல்:

    ஆப்கானிஸ்தான் ஜலாலாபாத் நகரில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தில் விசாக்களுக்கு விண்ணப்பிக்க இன்று டோக்கன் வழங்கப்பட்டது. இதற்காக அங்கு 3 ஆயிரத்திற்கும் அதிகமானோர் திரண்டிருந்தனர். அப்போது ஏற்பட்ட கூட நெரிசலில் சிக்கி பெண்கள் உள்பட 15 ஆப்கானிஸ்தானியர்கள் பலியானதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    எட்டு பெண்கள் உட்பட பலர் காயமடைந்துள்ளனர். கூட்டத்தில் நின்று இருந்த பல வயதானவர்களும் காயமடைந்தனர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது. 

    ஒவ்வொரு ஆண்டும் பல்லாயிரக்கணக்கான ஆப்கானிஸ்தானியர்கள் மருத்துவ சிகிச்சை, கல்வி மற்றும் வேலைகளைப் பெறுவதற்காக அண்டை  நாடான பாகிஸ்தானுக்குச் செல்கின்றனர். இரு நாடுகளும் கிட்டத்தட்ட 2,600 கிலோமீட்டர் எல்லையை பகிர்ந்து கொள்கின்றன.

    போரினால் பாதிக்கப்பட்ட நாட்டில் வன்முறை, மத துன்புறுத்தல் மற்றும் வறுமையை விட்டு வெளியேறிய சுமார் 30 லட்சம் ஆப்கானஸ்தான் அகதிகள் மற்றும் பொருளாதார குடியேறியவர்களை பாகிஸ்தான் கொண்டுள்ளது.

    கூட்ட நெரிசலால் ஏற்பட்ட அசம்பாவிதம் குறித்து பாகிஸ்தான் தூதரக அதிகாரிகள் உடனடியாக எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை. 
    Next Story
    ×