search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கண்ணிவெடி தாக்குதலுக்கு உள்ளான கார்
    X
    கண்ணிவெடி தாக்குதலுக்கு உள்ளான கார்

    ஆப்கானிஸ்தான்: சாலையோர கண்ணிவெடி தாக்குதலில் அப்பாவி பொதுமக்கள் 5 பேர் பலி

    ஆப்கானிஸ்தானில் சாலையோர கண்ணிவெடி தாக்குதல் சம்பவத்தில் அப்பாவி பொதுமக்கள் 5 பேர் உயிரிழந்தனர்.
    காபுல்:

    ஆப்கானிஸ்தானின் தலிபான் பயங்கரவாதிகளுக்கும் அரசுப்படைகளுக்கும் இடையே 19 ஆண்டுகளாக உள்நாட்டுப்போர் நடந்து வருகிறது.

    இந்த உள்நாட்டு போரில் ஆப்கானிஸ்தான் அரசுக்கு அமெரிக்கா தலைமையிலான கூட்டுப்படைகள் ஆதரவு அளித்து வருகின்றன. ஆனாலும் போரை முடிவுக்கு கொண்டுவர தலிபான்கள்- அமெரிக்கா இடையே உடன்படிக்கை செய்யப்பட்டுள்ளது.

    இதையடுத்து, கத்தார் தலைநகர் தோகாவில் தலிபான்களுக்கும் ஆப்கானிஸ்தான் அரசுக்கும் இடையே தற்போது பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. 

    இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டு பல ஆண்டுகளாக நடைபெற்று வரும் உள்நாட்டு சண்டை முடிவுக்கு கொண்டுவர தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    அமைதி பேச்சுவார்த்தை ஒரு பக்கம் நடைபெற்று வந்தாலும் வந்தாலும் தலிபான் பயங்கரவாதிகள் ஆப்கானிஸ்தானில் தங்கள் தாக்குதல்களை தொடர்ந்து நடத்தி வருகின்றனர். 

    இந்நிலையில், அந்நாட்டின் வெட்டெக் மாகாணம் ஜெல்ரிஷ் மாவட்டத்தில் உள்ள நெடுச்சாலையில் தலிபான் பயங்கரவாதிகளால் மறைத்து வைக்கப்பட்டிருந்த இரண்டு குண்டுகள் இன்று வெடித்து சிதறியது. 

    இந்த குண்டுவெடிப்பில் அந்த சாலையில் வந்துகொண்டிருந்த காரில் இருந்த குழந்தை உள்பட 5 பேர் உயிரிழந்தனர். மேலும், 9 பேர் படுகாயமடைந்தனர்.

    Next Story
    ×