search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    மாதந்தோறும் 1½ கோடி கொரோனா தடுப்பூசி தயாரிக்க ரஷியா முடிவு

    வசந்த காலத்தில் தடுப்பூசி தயாரிப்பை மாதந்தோறும் 1½ கோடி ‘டோஸ்’ அளவுக்கு அதிகரிக்க முடிவு செய்துள்ளதாக ரஷிய தொழில், வர்த்தக மந்திரி டெனிஸ் மந்துரோவ் தெரிவித்தார்.
    மாஸ்கோ:

    கொரோனா வைரஸ் பெருந்தொற்றை தடுத்து நிறுத்துவதற்காக ‘ஸ்புட்னிக்-வி’ என்ற தடுப்பூசியை ரஷியா உருவாக்கி, அதன் இறுதிக்கட்ட மருத்துவ பரிசோதனையை நடத்தி வருகிறது.

    இந்த தடுப்பூசியை நவம்பர் மாதம் 8 லட்சம் ‘டோஸ்’, டிசம்பர் மாதம் 15 லட்சம் ‘டோஸ்’, ஜனவரியில் 30-35 லட்சம் ‘டோஸ்’ தயாரிக்க ரஷியா திட்டமிட்டுள்ளது.

    அதே நேரத்தில் வசந்த காலத்தில் (மார்ச், ஏப்ரல், மே) தடுப்பூசி தயாரிப்பை மாதந்தோறும் 1½ கோடி ‘டோஸ்’ அளவுக்கு அதிகரிக்க முடிவு செய்துள்ளதாக தொழில், வர்த்தக மந்திரி டெனிஸ் மந்துரோவ் தெரிவித்தார்.
    Next Story
    ×