search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    துபாய் சபாரி பூங்காவில் முதல் முறையாக உலா வரும் ஆப்பிரிக்க யானைகளை படத்தில் காணலாம்.
    X
    துபாய் சபாரி பூங்காவில் முதல் முறையாக உலா வரும் ஆப்பிரிக்க யானைகளை படத்தில் காணலாம்.

    துபாய் சபாரி பூங்கா திறப்பு- ஆப்பிரிக்க நாட்டு யானைகளை பார்வையிட பொதுமக்கள் ஆர்வம்

    துபாய் சபாரி பூங்காவில் முதல் முறையாக உலா வரும் ஆப்பிரிக்க யானைகளை பொதுமக்கள் ஆர்வத்துடன் பார்வையிட்டு வருகின்றனர்.
    துபாய்:

    துபாய் மாநகராட்சி சார்பில் 100 கோடி திர்ஹாம் செலவில் அல் வர்கா பகுதி 5-ல் 119 எக்டேர் நிலப்பரப்பில் பிரமாண்டமாக வன விலங்குகள் உலாவும் இயற்கை பகுதியாக உருவாக்கப்பட்டுள்ள வன உயிரின பூங்கா துபாய் சபாரி பூங்காவாகும். இந்த பூங்காவில் காட்டில் வாழும் விலங்குகள், பறவைகள் மற்றும் தண்ணீர் வாழ் உயிரினங்கள் என 3 ஆயிரம் வன விலங்குகளை பொது மக்கள் சென்று பார்வையிட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    இதில் ஆப்பிரிக்கா, அரேபிய மற்றும் ஆசிய கண்டங்களை சேர்ந்த நாடுகளில் உள்ள கிராமங்களின் மாதிரிகள் அனைத்தும் தத்ரூபமாக உருவாக்கப்பட்டுள்ளது. சபாரி பூங்கா முதல் முறையாக பொதுமக்கள் பார்வையிடுவதற்காக கடந்த 2017-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 12-ந்தேதி திறக்கப்பட்டது. பிறகு மறுசீரமைப்பு, பராமரிப்பு பணிகளுக்காக கடந்த 2018-ம் ஆண்டு மூடப்பட்டு இம்மாதம் திறக்கப்பட்டது. அந்த நேரத்தில் இந்த பூங்காவிற்கு ஜிம்பாவே நாட்டில் இருந்து ஒரு ஆண் மற்றும் 3 பெண் என மொத்தம் 4 ஆப்பிரிக்க வகை யானைகள் கொண்டு வரப்பட்டது.

    பூங்கா மூடப்பட்ட காரணத்தால் அந்த யானைகள் இதுவரை காட்சிப்படுத்தப்படாமல் இருந்தது. 4 யானைகளுக்கும் தற்போது 6 வயதாகிறது. இந்த யானைகள் மொத்தம் 70 ஆண்டுகள் வாழக்கூடியவை. ஆப்பிரிக்க யானைகளில் பெரிய காதுமடல்களுடன் ஆண், பெண் 2 வகைகளுக்கும் தந்தங்கள் உள்ளது. ஆசிய பெண் யானைகளில் தந்தம் அரிதாகவே காணப்படும். இந்த யானைகளுக்கு டெம்போ, மாடிபா, ஜுலு மற்றும் ஜிஜிங்கா என பெயரிடப்பட்டுள்ளது.

    ஆப்பிரிக்க யானைகள் நடமாட பிரத்தியேக பகுதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த பகுதிகளில் அந்த யானைகளுக்கு இயற்கையான வாழிடத்தை அளிக்கவும், உணவுக்காகவும் மரங்கள், செடி வகைகள் அதிக அளவில் நடப்பட்டுள்ளது. இங்குள்ள செடி, இழை, தழைகளை இந்த யானைகள் உணவாக உண்டு வருகின்றன. இந்த யானைகளை பொதுமக்கள் ஆர்வத்துடன் பார்வையிட்டு வருகின்றனர்.

    மேற்கண்ட தகவலை சபாரி பூங்காவில் பணியாற்றும் இந்திய வன உயிரின விஞ்ஞானி டாக்டர் ஷம்சாத் ஆலம் தெரிவித்தார்.
    Next Story
    ×