search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டொனால்டு டிரம்ப்
    X
    டொனால்டு டிரம்ப்

    இதை ஏன் விவாதிப்பதில்லை: மீடியாக்கள் மீது டொனால்டு டிரம்ப் பாய்ச்சல்

    ஊடகங்கள் அனைத்தும் கொரோனா பற்றியே விவாதித்து வருவதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் குற்றம்சாட்டியுள்ளார்.
    அமெரிக்க அதிபர் தேர்தல் அடுத்த மாதம் நடைபெற இருக்கிறது. 2-வது முறையாக வெற்றி பெற்று விடலாம் என டொனால்ட் டிரம்ப் நினைத்திருந்தார். ஆனால் கொரோனா வைரஸ் அவரது நினைப்பை நொறுக்கியது. டொனால்டு டிரம்பின் தவறான நடவடிக்கை காரணமாக கொரோனாவுக்கு அதிக உயிர்களை பலி கொடுக்க வேண்டியதாயிற்று என எதிர்க்கட்சி குற்றம்சாட்டி வருகிறது. தேர்தல் பிரசாரத்தில் பிரதான தாக்குதலே இதுதான்.

    இதற்கிடையே ஊடகங்களும் இதுகுறித்துதான் விவாதித்து வருகின்றன. இந்நிலையில் டொனால்டு டிரம்ப் தனது டுவிட்டர் பக்கத்தில் ‘‘வேலை வாய்ப்பு, ஸ்டாக் மார்க்கெட், பொருளாதாரம் ஆகியவை டொனால்டு டிரம்ப் நிர்வாகத்தின் கீழ் எப்படி சிறப்பாக இருந்தது என்பதை விவாதிக்க பொய் செய்தி ஊடகங்கள் (The Fake News Media) மறுக்கிறது. விரைவில் நாங்கள் புள்ளி விவரத்துடன் வருவோம். அவர்கள் அனைவரும் கொரோனா குறித்து விவாதிக்க விரும்புகிறார்கள். அவர்களால் சொல்ல முடியாது,  ஆனால், நாங்கள் எதிர்க்கட்சியை வீழ்த்துவோம்’’ என்று பதிவிட்டுள்ளார்.

    அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் பெரும்பாலான நேரங்களில் ஊடகங்கள் மீது குற்றம்சாட்டுவதை வழக்கமாக வைத்துள்ளார்.
    Next Story
    ×