search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா பரிசோதனை
    X
    கொரோனா பரிசோதனை

    ரஷ்யாவில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 20 ஆயிரத்தை தாண்டியது

    ரஷ்யாவில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 20 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது.
    மாஸ்கோ:

    உலக அளவில் கொரோனா பாதிப்பில் முதலிடத்தில் அமெரிக்காவும், இரண்டாம் இடத்தில் இந்தியாவும், மூன்றாவது இடத்தில் பிரேசிலும் உள்ளன.

    கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் வரிசையில் ரஷ்யா 4-வது இடத்தில் உள்ளது.

    உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றால் இதுவரை 3.29 கோடி பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். வைரஸ் தொற்றுக்கு இதுவரை 9.96 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் ரஷ்ய நாட்டிலும் அதிகரித்து வருகிறது.

    இந்நிலையில், அங்கு கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 7,523 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் ரஷ்யாவில் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை தற்போது 11,43,571 ஆக அதிகரித்துள்ளது.

    கொரோனா தொற்றுக்கு மேலும் 169 பேர் உயிரிழந்ததால், அங்கு பலியானோர் எண்ணிக்கை 20 ஆயிரத்தைக் கடந்துள்ளது.

    கொரோனா தொற்றில் இருந்து இதுவரை 9.40 லட்சம் பேர் முழுமையாக சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போது 1.83 லட்சம் பேர் மருத்துவமனை சிகிச்சையில் உள்ளனர்.
    Next Story
    ×