search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஐ.நா. சபை
    X
    ஐ.நா. சபை

    சீனாவுடனான எல்லை பிரச்சினையை ஐ.நா.வில் விவாதிக்க மாட்டோம்- இந்தியா அறிவிப்பு

    சீனாவுடனான எல்லை பிரச்சினையை ஐ.நா.வில் விவாதிக்க மாட்டோம் என்று ஐ.நா.சபைக்கான இந்திய தூதர் டி.எஸ். திருமூர்த்தி தெரிவித்துள்ளார்.
    நியூயார்க்:

    ஐ.நா.சபைக்கான இந்திய தூதர் டி.எஸ். திருமூர்த்தி, நியூயார்க்கில் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவரிடம் “சீனாவுடனான லடாக் எல்லை பிரச்சினை குறித்து ஐ.நா.சபையில் விவாதிக்க வேண்டும் என்று கேட்பீர்களா?’ என கேள்வி எழுப்பப்பட்டது.

    அதற்கு அவர், “மாட்டோம். இந்த பிரச்சினையை இரு தரப்பினரும், தற்போது உள்ள நம்பிக்கையை வளர்க்கும் வழிமுறைகள் மூலம் கையாள்கிற முதிர்ச்சியை பெற்றிருக்கிறோம். நாங்கள் ஏற்கனவே இந்த பிரச்சினையில் இரு தரப்பிலும் செயல்பட்டு வருகிறோம். எங்கள் இரு தரப்பு விவகாரத்தில் ஐ.நா.சபைக்கு பங்கு இருப்பதாக நாங்கள் பார்க்கவில்லை” என கூறினார்.
    Next Story
    ×