என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கொரோனாவுக்கு எதிரான ரஷிய தடுப்பூசிக்கு உலக சுகாதார அமைப்பு பாராட்டு
Byமாலை மலர்22 Sep 2020 4:04 AM GMT (Updated: 22 Sep 2020 4:04 AM GMT)
கொரோனா தடுப்பூசியை உருவாக்கியதற்காக குறிப்பாக ‘ஸ்புட்னிக் வி’ தடுப்பூசிக்காக ரஷியாவுக்கு உலக சுகாதார அமைப்பு மிகுந்த பாராட்டு தெரிவிக்கிறது.
மாஸ்கோ:
கொரோனாவுக்கு எதிராக பல்வேறு நாடுகள் தடுப்பூசி தயாரிப்பில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. இதில் முதல் நாடாக ரஷியா கடந்த மாத தொடக்கத்திலேயே தடுப்பூசி ஒன்றை பதிவு செய்து கொண்டுள்ளது.
ரஷியாவின் தயாரிப்பான ‘ஸ்புட்னிக் வி’ தடுப்பூசிக்கு 20-க்கும் மேற்பட்ட நாடுகள் 100 கோடிக்கும் அதிகமான டோஸ்களுக்கு ஒப்பந்தம் போட்டுள்ளன. இதைப்போல இந்த தடுப்பூசியை அதிக அளவில் தயாரிக்க 5 நாடுகளும் ஒப்பந்தம் போட்டுள்ளன.
இந்த நிலையில் ரஷிய சுகாதார மந்திரி மிகெயில் முராஸ்கோவை உலக சுகாதார அமைப்பின் ஐரோப்பிய பிராந்திய தலைவர் ஹன்ஸ் குளூஜ் சந்தித்து பேசினார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘கொரோனா தடுப்பூசியை உருவாக்கியதற்காக குறிப்பாக ‘ஸ்புட்னிக் வி’ தடுப்பூசிக்காக ரஷியாவுக்கு உலக சுகாதார அமைப்பு மிகுந்த பாராட்டு தெரிவிக்கிறது. பாதுகாப்பு மற்றும் வலிமையான ஒரு தடுப்பூசியை உருவாக்கியதற்காக ரஷியாவுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்’ என்று கூறினார்.

Next Story
×