search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ப்ரூசெல்லா
    X
    ப்ரூசெல்லா

    சீனாவில் பரவும் புதிய வைரஸ் தொற்று- ஆண்களுக்கு மலட்டுத்தன்மை ஏற்படும்

    சீனாவில் புதிய பாக்டீரியா தொற்று வேகமாக பரவி வருகிறது. ஏற்கனவே உருவான கொரோனா வைரசுக்கு மருந்து கண்டு பிடிக்கப்படாத நிலையில் தற்போது மற்றொரு வைரஸ் பரவி வருவது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
    பீஜிங்:

    கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவின் வுகான் நகரில் தொடங்கிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி பெரும்பாதிப்பை ஏற்படுத்தியது. தற்போது அந்த வைரஸ் சீனாவில் கட்டுப்படுத்தப்பட்டு உள்ளது.

    இதையடுத்து சீனா முழுவதும் மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி உள்ளனர்.

    இந்த நிலையில் சீனாவில் புதிய பாக்டீரியா தொற்று வேகமாக பரவி வருகிறது. ஏற்கனவே உருவான கொரோனா வைரசுக்கு மருந்து கண்டு பிடிக்கப்படாத நிலையில் தற்போது மற்றொரு வைரஸ் பரவி வருவது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

    கன்சு மாகாணத்தின் தலைநகரான லான்ஷோ சுகாதார ஆணையத்தின் தகவலின்படி புதிய வைரஸ் தொற்றால் சீனாவில் இதுவரை 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

    இது ‘ப்ரூசெல்லா’ என்ற பாக்டீரியாவை கொண்டு இருக்கும் கால்நடைகளுடனான தொடர்பு காரணமாக ஏற்படுவதாக கூறப்படுகிறது. இந்த வைரஸ் ஆண்களுக்கு மலட்டுத்தன்மையை ஏற்படுத்தும் என்றும் வாழ்நாள் முழுக்க பக்க விளைவுகளை ஏற்படுத்தும் என்றும் ஆய்வுகளில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

    மேலும் மால்டா காய்ச்சல் என்று அழைக்கப்படும் இந்த நோய் தலைவலி, தசை வலி, காய்ச்சல் மற்றும் சோர்வு ஆகியவற்றை ஏற்படுத்தும். சிறிது காலம் கழித்து அந்த அறிகுறிகள் குறைந்துவிடும். என்றாலும், சில அறிகுறிகள் நீண்ட நாட்கள் இருக்கக்கூடியதாக மாறக்கூடும்.

    இந்த வைரஸ் தாக்கினால் சில உறுப்புகளில் வீக்கம் அல்லது மூட்டுவலி போன்ற நிரந்தர தாக்கம் ஏற்படும். இந்த வைரஸ் மனிதர்களிடையே பரவுவது மிகவும் அரிதானது என்றும் அசுத்தமான உணவை சாப்பிடுவதன் மூலமாகவோ அல்லது பாக்டீரியாவை சுவாசிப்பதன் மூலமாகவோ தொற்று பரவும் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

    சி.என்.என். தொலைக்காட்சியின் தகவல்படி கடந்த ஆண்டு மத்தியில் லான்ஜோ உயிரியல் மருந்து தொழிற்சாலையில் விலங்குகளின் பயன்பாட்டுக்கு ப்ரூசெல்லா தடுப்பூசிகள் தயாரிக்கும் போது ஏற்பட்ட கசிவால் இந்த வைரஸ் பரவல் ஏற்பட்டதாக தெரியவந்துள்ளது.

    கழிவு வாயுவில் இருந்து அனைத்து பாக்டீரியாவும் முழுமையாக அழிக்கப்படவில்லை என்றும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
    Next Story
    ×