search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    ரஷ்யாவில் கொரோனா சிகிச்சைக்கான முதல் மருந்து விற்பனைக்கு அனுமதி

    ரஷ்யாவில் கொரோனா வைரசால் லேசான மற்றும் மித அளவில் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க பயன்படும் முதல் மருந்து விற்பனை அடுத்த வாரத்தில் இருந்து தொடங்குகிறது.
    மாஸ்கோ:

    ரஷ்யாவில் கொரோனா வைரசால் லேசாக மற்றும் மித அளவில் பாதிக்கப்பட்டு வெளி நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு கொரோனாவிர் என்ற மருந்து பரிந்துரைக்கப்பட்டு உள்ளது.

    கடந்த மே மாதம் ரஷ்யாவில் கொரோனாவுக்கான அவிபேவிர் என்ற மருந்துக்கு அனுமதி கிடைத்தபின்னர் கொரோனாவிர் என்ற 2வது மருந்துக்கு ஒப்புதல் வழங்கப்பட்டு உள்ளது.

    இது அடுத்த வாரம் முதல் மருந்து கடைகளில் விற்பனைக்கு வரவுள்ளது.

    இந்த இரு மருந்துகளும் பேவிபிரவிர் என்ற மருந்தினை அடிப்படையாக கொண்டது.  இந்த மருந்து ஜப்பானில் உருவாக்கப்பட்டு வைரசுக்கு எதிரான சிகிச்சைக்கு பயன்படுத்தப்பட்டு வந்தது.  இதனால், கொரோனா வைரசுக்கு எதிரான உலக நாடுகளின் முயற்சியில் ரஷ்யா முன்னிலையில் உள்ளது.

    இதுதவிர ஸ்புட்னிக் வி என்ற தடுப்பு மருந்து வினியோகத்திற்கு பல்வேறு சர்வதேச நாடுகளுடன் ரஷ்யா ஒப்பந்தம் செய்துள்ளது.  இதற்காக நடத்தப்பட்ட கொரோனா வைரசின் பரிசோதனைகளையும் அந்நாடுகளுக்கு முன்பே வழங்கியிருக்கிறது.

    இந்த கொரோனவிர் மருந்து 168 கொரோனா நோயாளிகளுக்கு பரிசோதனை முயற்சியாக அளிக்கப்பட்டு அதன் 3வது கட்ட முடிவில் ஒப்புதல் கிடைத்து உள்ளது.  கொரோனா நோயாளிகளுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க, இந்த மருந்துக்கு முதலில் கடந்த ஜூலையில் ஒப்புதல் வழங்கப்பட்டு இருந்தது என அந்நாட்டு அரசு ஆவண பதிவு தெரிவிக்கின்றது.
    Next Story
    ×