search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சர்பிங் செய்து கின்னஸ் சாதனை படைத்த பிரேசில் பெண்
    X
    சர்பிங் செய்து கின்னஸ் சாதனை படைத்த பிரேசில் பெண்

    73 அடி உயர அலைக்கு நடுவே சர்பிங் செய்து கின்னஸ் சாதனை படைத்த பிரேசில் பெண் - திகில் வீடியோ

    73 அடி உயர அலைகளுக்கு நடுவே பெண் ஒருவர் சர்பிங் செய்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகிவருகிறது.
    பிரேசிலியா:

    மனிதர்கள் படைக்கும் சாதனைகளும், இயற்கையின் அதிசயங்களும் கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் பதிவு செய்யப்படுகின்றன. எனவே சாதனை படைக்கத் துடிக்கும் பலர் தங்களுடைய பெயரை எப்படியாவது கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம்பெற செய்துவிட வேண்டும் என தீவிரமாக முயற்சித்து வரும் செய்திகளை நாம் பார்த்துக்கொண்டு இருக்கிறோம்.

    தங்களிடம் புதைந்திருக்கும் தனித்திறமைகளை வெளி உலகத்திற்கு வெளிச்சமிட்டு காட்சிப்படுத்தும் நோக்கில் கின்னஸ் சாதனை படைப்பவர்கள் தான் மிக அதிகம்.  கின்னஸ் உலக சாதனை பட்டத்தைப் பெறும்போது பல்வேறு விருப்பங்களைத் போட்டியாளர்கள் தேர்வு செய்கிறார்கள்.

    சிலர் 3 நிமிடங்களுக்குள் 10 டோனட்ஸ் சாப்பிடத் தேர்வுசெய்தால், மற்றவர்கள் ரூபிக்ஸ் க்யூப்ஸை சரி செய்யும் சவாலை ஏற்றுக்கொள்கிறார்கள். இப்போது பட்டியலில் ஒரு புதிய சேர்க்கை உள்ளது. இது பிரேசிலின் சர்பர் மாயா கபீரா என்ற பெண் 73.5 அடி உயர அலையில் சர்பிங் செய்ததன் மூலம் மிகப்பெரிய அலையில் சர்பிங் செய்த பெண் என்ற சாதனையை படைத்துள்ளார். இதில், ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், அது தொடர்பான வீடியோ தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    கின்னஸ் வேர்ல்ட் ரெக்கார்ட்ஸின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் பகிரப்பட்ட இந்த வீடியோ 40 வினாடிகளுக்கு மேல் நீள்கிறது.  செப்டம்பர் 11-ம் தேதி அந்த வீடியோ பதிவிடப்பட்ட நிலையில், இதுவரை 61 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் அந்த வீடியோவைப் பார்த்துள்ளனர்.

    மேலும், 2500க்கும் மேற்பட்டோர் அந்த வீடியோவை லைக் செய்துள்ளனர். அதே போல, 800க்கும் மேற்பட்டோர் ரீடிவீட் செய்துள்ளனர். அந்த வீடியோவைப் பார்த்த பலர் ஆச்சரியமடைந்தது மட்டுமல்லாமல், அந்த பெண்ணுக்கு பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர். இந்த வீடியோ காட்சிகள் மிகவும் பிரமிப்பூட்டுவதாக இருப்பதாக பலரும் டுவிட்டரில் கருத்து கூறி வருகின்றனர்.
    Next Story
    ×