search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டிரம்ப்
    X
    டிரம்ப்

    டிக்-டாக் செயலிக்கான காலக்கெடுவை நீட்டிக்க டிரம்ப் மறுப்பு

    ஒன்று செயலியை விற்க வேண்டும் இல்லையேல் மூட வேண்டும். டிக்-டாக் செயலிக்கான காலக்கெடுவை நீட்டிக்க போவதில்லை என டிரம்ப் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
    வாஷிங்டன் :

    சீனாவின் பைட்டான்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான டிக்-டாக் உள்ளிட்ட பல செயலிகள் இந்தியாவின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக கூறி அவற்றுக்கு இந்தியா தடை விதித்தது.

    இந்தியாவின் இந்த அதிரடி நடவடிக்கையை வரவேற்ற அமெரிக்க அதிகாரிகள் அமெரிக்காவிலும் டிக்-டாக் செயலிக்கு தடை விதிக்க வேண்டும் என ஜனாதிபதி டிரம்புக்கு கோரிக்கை வைத்தனர். அதனைத் தொடர்ந்து செப்டம்பர் 15-ம் தேதிக்குள் பைட்டான்ஸ் நிறுவனம் டிக்-டாக் செயலியை அமெரிக்க நிறுவனத்துக்கு விற்க வேண்டும் அல்லது அந்த செயலிக்கு அமெரிக்காவில் முழுமையாக தடை விதிக்கப்படும் என்று டிரம்ப் உத்தரவிட்டார்.

    டிரம்ப் நிர்வாகத்தின் இந்த உத்தரவை எதிர்த்து பைட்டான்ஸ் நிறுவனம் அமெரிக்க கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளது. இந்தநிலையில் டிரம்ப் விதித்த காலக்கெடு இன்னும் சில தினங்களில் முடிய இருக்கும் நிலையில் டிக்-டாக் செயலியை அமெரிக்க நிறுவனத்திடம் விற்பதற்கான எந்த உடன்பாடும் இதுவரை ஏற்படாததால் காலக்கெடு நீட்டிக்கப்படுமா என்ற கேள்வி எழுந்தது.

    ஆனால் டிக்-டாக் செயலிக்கான காலக்கெடுவை நீட்டிக்க போவதில்லை என டிரம்ப் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். பத்திரிகையாளர்களிடம் இதுபற்றி அவர் கூறியதாவது: இறுதிக்கெடுவை நீட்டிக்கப்போவதில்லை. ஆம். செப். 15 இறுதிக்கெடு.

    டிக்டாக் இறுதிக்கெடு நீட்டிக்கப்பட மாட்டாது. என்ன நடக்கிறது என்று பார்ப்போம், ஒன்று செயலியை விற்க வேண்டும் இல்லையேல் மூட வேண்டும். ஆகவே பாதுகாப்புக் காரணங்களுக்காக டிக்-டாக் செயலியை மூடப்போகிறோமா அல்லது அமெரிக்க நிறுவனத்துக்கு விற்கப்போகிறார்களா என்பதைப் பார்ப்போம்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×