search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    ர‌ஷிய தடுப்பூசியின் இறுதிகட்ட சோதனை தொடங்கியது - 31 ஆயிரம் பேருக்கு செலுத்தப்படும்

    ர‌ஷிய தடுப்பூசியின் 3-வது இறுதிக்கட்ட மருத்துவ பரிசோதனை நேற்று தொடங்கி உள்ளதாக அந்த நாட்டின் சுகாதார மந்திரி மிக்கேல் முரா‌‌ஷ்கோ அறிவித்துள்ளார்.
    மாஸ்கோ:

    உலகின் முதலாவது கொரோனா தடுப்பூசியை உருவாக்கி உள்ளதாக ர‌ஷிய அதிபர் விளாடிமிர் புதின் கடந்த மாதம் 11-ந் தேதி அறிவித்து உலகையே அதிர வைத்தார்.

    ‘ஸ்புட்னிக்-வி’ என்று அழைக்கப்படுகிற இந்த தடுப்பூசியின் முதல் இரு கட்ட மருத்துவ பரிசோதனை முடிந்த நிலையில், பதிவு செய்யப்பட்டது.

    இந்த நிலையில் 3-வது இறுதிக்கட்ட மருத்துவ பரிசோதனை நேற்று தொடங்கி உள்ளதாக அந்த நாட்டின் சுகாதார மந்திரி மிக்கேல் முரா‌‌ஷ்கோ அறிவித்துள்ளார். ‘ஸ்புட்னிக்-வி’ தடுப்பூசியின் நீண்ட கால பாதுகாப்பு மற்றும் செயல்திறன், இந்த மருத்துவ பரிசோதனையில் தெரிய வரும்.

    இந்த தடுப்பூசியை 31 ஆயிரம் தன்னார்வலர்களுக்கு செலுத்தி சோதிக்கப்படும் என மாஸ்கோவில் இருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன. இந்த தடுப்பூசி பாதுகாப்பானது என்று ஏற்கனவே ‘லேன்செட்’ மருத்துவ பத்திரிகை கூறியது நினைவுகூரத்தக்கது.
    Next Story
    ×