search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தாக்குதல் நடந்த பகுதி
    X
    தாக்குதல் நடந்த பகுதி

    ஆப்கானிஸ்தான் துணை அதிபரை குறிவைத்து வெடிகுண்டு தாக்குதல்- 10 பேர் பலி

    ஆப்கானிஸ்தான் துணை அதிபரை குறிவைத்து நடத்தப்பட்ட வெடி குண்டு தாக்குதலில் 10 பேர் உயிரிழந்தனர்.
    காபூல்:

    ஆப்கானிஸ்தான் நாட்டின் முதல் துணை அதிபரான அம்ருல்லா சலே இன்று தலைநகர் காபூலில் பாதுகாப்பு வாகன அணிவகுப்புடன் சென்றுகொண்டிருந்தார். அப்போது அவர் சென்ற வாகனத்தை குறிவைத்து பயங்கரவாதிகள் வெடிகுண்டு தாக்குதல் நடத்தினர். 

    வெடிகுண்டுகள் வெடித்து சிதறியதில் வாகனங்கள் தூக்கி வீசப்பட்டு சேதமடைந்தன. இந்த பயங்கரவாத தாக்குதலில் துணை அதிபர் அம்ருல்லா சலே லேசான காயங்களுடன் உயிர் தப்பினார். இந்த தாக்குதலில் 10 பேர் உயிரிழந்தனர். துணை அதிபரின் பாதுகாவலர்கள் உள்ளிட்ட பலர் பலத்த காயமடைந்தனர். இந்த தாக்குதலுக்க உடனடியாக எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.,

    ஆப்கன் துணை அதிபர் மீதான தாக்குதலுக்கு இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவிப்பதுடன், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்வதாக இந்திய வெளியுறவுத்துறை செய்தி வெளியிட்டுள்ளது. ஆப்கானிஸ்தானில் அமைதியை நிலைநாட்டவும், பயங்கரவாத உள்கட்டமைப்பு மற்றும் ஆதரவாளர்களை ஒழிப்பதற்கும் நடக்கும் போராட்டத்தில் இந்தியா ஆப்கானிஸ்தானுடன் நிற்பதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.
    Next Story
    ×