search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டிரம்ப்
    X
    டிரம்ப்

    ஜனாதிபதி தேர்தலில் அமெரிக்க வாழ் இந்தியர்கள் எனக்கே வாக்களிப்பார்கள் - டிரம்ப் நம்பிக்கை

    ஜனாதிபதி தேர்தலில் அமெரிக்க வாழ் இந்தியர்கள் தனக்கே வாக்களிப்பார்கள் என ஜனாதிபதி டிரம்ப் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
    வாஷிங்டன்:

    அமெரிக்காவில் வரும் நவம்பர் மாதம் 3-ந் தேதி ஜனாதிபதி தேர்தல் நடக்கிறது. இந்த தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் தற்போதைய ஜனாதிபதி டிரம்ப் 2-வது முறையாக போட்டியிடுகிறார்.

    குடியரசு கட்சியின் சார்பில் முன்னாள் துணை ஜனாதிபதி ஜோ பைடன் களம் இறக்கப்பட்டு உள்ளார். மேலும் அந்த கட்சியின் சார்பில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கமலா ஹாரிஸ் துணை ஜனாதிபதி பதவிக்கு போட்டியிடுகிறார்.

    எனவே அமெரிக்காவில் உள்ள இந்தியர்களின் வாக்கு ஜனநாயக கட்சிக்கு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேசமயம் குடியரசு கட்சியினரும் அமெரிக்க வாழ் இந்தியர்களின் வாக்குகளை கவரும் வகையில் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர்.

    இந்தநிலையில் நடக்க இருக்கும் ஜனாதிபதி தேர்தலில் அமெரிக்க வாழ் இந்தியர்கள் தனக்கே வாக்களிப்பார்கள் என ஜனாதிபதி டிரம்ப் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

    வெள்ளை மாளிகையில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பின்போது இதுகுறித்து அவர் கூறுகையில், “இந்தியாவில் இருந்து எங்களுக்கு பெரும் ஆதரவு உள்ளது. பிரதமர் மோடியிடம் இருந்து எங்களுக்கு பெரும் ஆதரவு உள்ளது. அமெரிக்க வாழ் இந்தியர்களின் வாக்கு இந்த ஜனாதிபதி தேர்தலில் முக்கிய பங்கு வகிக்கும். அவர்கள் எனக்கே வாக்களிப்பார்கள் என்ற நம்பிக்கை உள்ளது” எனக் கூறினார்.
    Next Story
    ×