search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டிரம்ப் முன்னிலையில் பொருளாதார ஒப்பந்தம்
    X
    டிரம்ப் முன்னிலையில் பொருளாதார ஒப்பந்தம்

    செர்பியா - கொசோவோ இடையே பொருளாதார ஒப்பந்தம் - வரலாற்று நிகழ்வு

    அமெரிக்க அதிபர் டிரம்ப் முன்னிலையில் செர்பியா மற்றும் கொசோவோ நாடுகளுக்கு இடையே பொருளாதார ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது.
    வாஷிங்டன்:

    செர்பியா நாட்டின் ஒரு அங்கமாக இருந்த பகுதி கொசோவோ. ஆனால், 2008 ஆம் ஆண்டு செர்பியாவிடம் இருந்து பிரிந்து கொசோவோ தனி நாடாகவும், தென்கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் ஒன்றாகவும் அறிவிக்கப்பட்டது.

    ஆனால், கொசோவோ-வை தனிநாடாக செர்பியா அங்கீகரிக்காமல் இருந்தது. ஆனால் 2013 ஆம் ஆண்டு போடப்பட்ட உடன்படிக்கையின் படி கொசோவொ-வில் உள்ள மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தை அங்கீகரிப்பதாகவும், ஆனாலும் இது தங்களில் கட்டுப்பாட்டில் உள்ள தன்னாட்சி பெற்ற மாகாணம் என்றே தெரிவித்து வந்தது.

    மேலும், கொசோவோ மீது பொருளாதாரத்தடைகளை விதித்தது. இதனால் இரு நாடுகளுக்கும் இடையே பல ஆண்டுகளாக மோதல் நிலவி வந்தது. இந்த நாடுகளுக்கு இடையேயான மோதலை தணிக்க பல ஐரோப்பிய நாடுகள் முயற்சித்து வந்தன. ஆனால் அந்த முயற்சிகள் அனைத்தும் தோல்வியில் முடிந்தன.

    செர்பியா - கொசோவோ

    இந்நிலையில், அமெரிக்க அதிபரின் முயற்சியால் செர்பியா-கொசோவோ இடையேயான உறவில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இரு நாடுகளும் பொருளாதார ரீதியிலான பரஸ்பர  நடவடிக்கைகளுக்கு சம்பதம் தெரிவித்துள்ளன.

    இதற்கான ஒப்பந்தம் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் முன்னிலையில் இன்று நடைபெற்றது. கொசோவோ பிரதமர் அவ்துல்லா ஹோதி மற்றும் செர்பிய அதிபர் அலெக்சாண்டர் வுசிக் இடையே இரு நாடுகளுக்கான பொருளாதார ஒப்பந்தம் இன்று கையெழுத்தானது. 

    இந்த ஒப்பந்தம் மூலம் பல ஆண்டுகளாக நிலவி வரும் செர்பியா கொசோவோ நாடுகளுக்கு இடையேயான பிரச்சனைக்கு விரைவில் தீர்வு காணப்படலாம் என்ற நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. 
     

    Next Story
    ×