search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    குல்பூ‌‌ஷண் ஜாதவ்
    X
    குல்பூ‌‌ஷண் ஜாதவ்

    குல்பூ‌‌ஷண் ஜாதவுக்காக வாதாட வக்கீலை நியமிக்க இந்தியாவுக்கு மேலும் ஒரு வாய்ப்பு கொடுங்கள் - ஐகோர்ட்டு உத்தரவு

    குல்பூ‌‌ஷண் ஜாதவுக்காக வக்கீலை நியமிப்பதற்கு இந்தியாவுக்கு மேலும் ஒரு வாய்ப்பு அளிக்குமாறு பாகிஸ்தான் அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது
    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தானில் உளவு பார்த்ததாக கூறி இந்திய முன்னாள் கடற்படை அதிகாரி குல்பூ‌‌ஷண் ஜாதவை அந்த நாடு கைது செய்தது. அவருக்கு கடந்த 2017-ம் ஆண்டு மரண தண்டனை விதித்து ராணுவ கோர்ட்டு தீர்ப்பளித்தது.

    இதை மறு ஆய்வு செய்யுமாறு சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டதை தொடர்ந்து இஸ்லாமாபாத் ஐகோர்ட்டில் மறு ஆய்வு வழக்கு நடந்து வருகிறது. இந்த வழக்கில் ஜாதவுக்காக ஆஜராக வக்கீலை நியமிக்குமாறு பாகிஸ்தான் இந்தியாவை கேட்டுக்கொண்டது. ஆனால் அவருக்காக இந்திய வக்கீலை நியமிக்க இந்தியா விடுத்த கோரிக்கை பாகிஸ்தான் நிராகரித்தது.

    இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தபோது ஆஜரான அட்டார்னி ஜெனரல் காலித் ஜாவேத் கான், ‘குல்பூ‌‌ஷண் ஜாதவுக்காக வாதாட வக்கீலை நியமிக்குமாறு இந்தியாவை கேட்டுக்கொண்டோம். ஆனால் இந்தியா பதிலளிக்கவில்லை’ என்று கூறினார்.

    இதைத்தொடர்ந்து ஜாதவுக்காக வக்கீலை நியமிப்பதற்கு இந்தியாவுக்கு மேலும் ஒரு வாய்ப்பு அளிக்குமாறு பாகிஸ்தான் அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதி, இந்த வழக்கை அடுத்த மாதம் (அக்டோபர்) 3-ந்தேதிக்கு ஒத்திவைப்பதாக அறிவித்தார்.
    Next Story
    ×