search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ரஷியா வந்தடைந்தார் ராஜ்நாத்சிங்
    X
    ரஷியா வந்தடைந்தார் ராஜ்நாத்சிங்

    ரஷியா சென்றடைந்தார் இந்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங்

    ஷாங்காய் கூட்டமைப்பு மாநாட்டில் பங்கேற்பதற்காக இந்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத்சிங் ரஷியா சென்றடைந்தார்.
    மாஸ்கோ:

    ஷாங்காய் ஒத்துழைப்பு கூட்டமைப்பு நாடுகளின் பாதுகாப்புத்துறை மந்திரிகள் பங்கேற்கும் கூட்டம் ரஷிய தலைநகர் மாஸ்கோவில் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் பங்கேற்பதற்காக இந்தியா தரப்பில் பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத்சிங் 3 நாள் அரசு முறைப்பயணமாக நேற்று ரஷியா புறப்பட்டார்.

    இந்நிலையில், இந்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத்சிங் இன்று ரஷிய தலைநகர் மாஸ்கோவை சென்றடைந்தார். அவரை ரஷிய பாதுகாப்புத்துறையை சேர்ந்த அதிகாரிகள் விமான நிலையத்தில்
    வரவேற்றனர்.

    இந்த சுற்றுப்பயணத்தின்போது ரஷிய பாதுகாப்புத்துறை மந்திரியை ராஜ்நாத்சிங் சந்திக்க உள்ளார். இந்த சந்திப்பின்போது சீனாவுடனான மோதல், எஸ் 400 ஏவுகணை தடுப்பு கவனை இந்தியாவுக்கு குறிப்பிட்ட காலத்திற்குள் கொடுப்பது உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக ஆலோசனை நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    ஷாங்காய் மாநாட்டில் சீன பாதுகாப்புத்துறை மந்திரியும் பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், அவரை ராஜ்நாத் சிங் சந்திக்கமாட்டார் என பாதுகாப்புத்துறை அமைச்சக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    எல்லையில், சீனாவுடன் மோதல்போக்கு அதிகரித்து வரும் சூழ்நிலையில் இந்திய பாதுகாப்பு மந்திரியின் ரஷிய பயணம் சற்று முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

    Next Story
    ×