search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா சிகிச்சை மையத்தில் சீன அதிபர் ஜூ ஜுங்பிங்
    X
    கொரோனா சிகிச்சை மையத்தில் சீன அதிபர் ஜூ ஜுங்பிங்

    தங்கள் நாட்டை சேர்ந்த குறிப்பிட்ட பிரிவினருக்கு கடந்த ஒரு மாதமாக கொரோனா தடுப்பூசி செலுத்திவரும் சீனா - அதிர்ச்சி தகவல்

    சோதனை முயற்சியில் உள்ள கொரோனா தடுப்பூசியை கடந்த ஒரு மாதமாக தங்கள் நாட்டை சேர்ந்த குறிப்பிட்ட பிரிவினருக்கு சீனா செலுத்தி வருகிறது.
    பிஜுங்:

    உலகையே உலுக்கி வரும் கொரோனா வைரசுக்கு தடுப்பூசி கண்டுபிடிக்கும் முயற்சியில் பல்வேறு நாடுகள் இறங்கியுள்ளன. வைரசுக்கு தடுப்பூசியை கண்டுபிடிக்கும் இறுதிகட்ட பணியில் உள்ளதாக பல நாடுகள் தெரிவித்துள்ளன. குறிப்பாக ஆக்ஸ்போர்டு தடுப்பூசி உள்ளிட்ட பல தடுப்பூசிகள் இறுதிகட்ட பரிசோதனையில் உள்ளது.

    கொரோனா உருவான சீனாவும் தான் கொரோனா தடுப்பூசியை உருவாக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாக பல நாட்களாக தெரிவித்து வருகிறது. 

    ஆனால் அங்கு சோதனை கட்டத்தில் உள்ள தடுப்பூசியை அந்நாட்டு அரசு குறிப்பிட்ட பிரிவினருக்கு கடந்த ஜூலை 22 ஆம் தேதி முதல் செலுத்தி வருவது தெரியவந்துள்ளது.

    இது தொடர்பாக சீனாவின் தேசிய சுகாதாரத்துறை அமைப்பின் சேங் ஹூவாங்வி கூறியதாவது:-

    அவசரகால நடவடிக்கையாக கொரோனா தடுப்பூசியை (சோதனை நிலையில் உள்ள தடுப்பூசி) பயன்படுத்த ஜூலை 22 ஆம் தேதி அரசு அனுமதி அளித்துள்ளது. 

    இந்த தடுப்பூசி கொரோனா தடுப்பு பணியில் உள்ள மருத்துவ ஊழியர்களும், முன்கள ஊழியர்களும், வெளிநாட்டிற்கு வேலை நிமித்தமாக செல்லும் அரசுக்கு சொந்தமான நிறுவனங்களில் வேலை செய்யும் ஊழியர்களுக்கு இந்த தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. 

    இந்த தடுப்பூசி செலுத்தப்பட்டவர்களுக்கு சிறு பாதிப்புகள் ஏற்பட்ட போதும் காய்ச்சல் யாருக்கும் வரவில்லை.

    வரும் இலையுதிர் காலத்தில் (செப்டம்பர்-அக்டோபர்) மருத்துவ ஊழியர்கள், எல்லை படையினர் மற்றும் உணவு சந்தையில் வேலை செய்யும் ஊழியர்களுக்கு இந்த தடுப்பூசியை செலுத்த உள்ளோம்.

    என அவர் தெரிவித்தார்.

    பரிசோதனை முயற்சியில் உள்ள நிரூபிக்கப்படாத கொரோனா தடுப்பூசியை சீனா மிகப்பெரிய அளவில் தங்கள் நாட்டை சேர்ந்த மக்களுக்கு கடந்த 1 மாதமாக பிற நாடுகளுக்கு தெரியாமல் செலுத்தி வரும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

     
    Next Story
    ×