search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    லெபனான் விபத்து நடந்த பகுதி
    X
    லெபனான் விபத்து நடந்த பகுதி

    பெய்ரூட்டில் விபத்து நடந்த பகுதிகளை பார்வையிட்ட முதல் வெளிநாட்டு அதிபர்

    பெய்ரூட்டில் விபத்து நடந்த பகுதிகளை வெளிநாட்டு அதிபர் பார்வையிட்டார்.
    பெய்ரூட்:

    லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் உள்ள துறைமுகத்தில் ஆகஸ்ட் 4 ஆம் தேதி பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டது. இந்த வெடிவிபத்து பெய்ரூட் நகரையே உருகுலைய செய்துள்ளது.

    வெடிவிபத்து நடந்த சிலவினாடிகளில் பெய்ரூட் துறைமுகப்பகுதி முழுவதும் ஆரஞ்சு நிறத்தில் புகைமண்டலமாக மாறியது.

    இந்த வெடிவிபத்தில் பல கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமானது. துறைமுகப்பகுதியே நிலைகுலைந்தது. இந்த கோரவிபத்தில் இதுவரை 157 பேர் உயிரிழந்துள்ளனர். 5 ஆயிரத்துக்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளனர்.

    துறைமுகப்பகுதியில் உள்ள சேமிப்பு கிடங்கில் வைக்கப்பட்டிருந்த 2 ஆயிரத்து 750 டன் அளவிலான வெடிக்கக்கூடிய அமோனியம் நைட்ரேட் வேதிப்பொருளால் இந்த கோரவிபத்து நடைபெற்றுள்ளது.

    இந்த விபத்தில் 3 லட்சத்துக்கும் அதிகமானோர் வீடுகளை இழந்தனர். அரசியல் குழப்பம், ஊழல் உள்பட பல்வேறு பிரச்சனைகளை சந்தித்து வரும் லெபனானில் இந்த விபத்து பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

    இந்நிலையில், பெய்ரூட் வெடி விபத்து நடைபெற்று 2 நாட்களில் (ஆகஸ்ட் 7) விபத்து நடந்த பகுதிகளை பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மெக்ரான் நேரில் பார்வையிட்டார்.

    விபத்து நடைபெற்றப்பின் லெபனானுக்கு பயணம் மேற்கொண்ட முதல் வெளிநாட்டு அதிபர் மெக்ரான் தான். 

    விபத்து நடந்த பகுதியை பார்வையிட்ட இம்மானுவேல்

    விபத்து நடந்த பகுதிகளில் ஆய்வு செய்த மெக்ரான் அங்கிருந்த பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவு தெரிவித்தார். மேலும், இந்த வெடிவிபத்தால் ஏற்பட்ட பாதிப்பில் இருந்து பெய்ரூட் மீண்டுவர தேவையான உதவிகளை செய்வேன் என அதிபர் இம்மானுவேல் உறுதியளித்தார்.

    இதற்கிடையில், ஊழல் மிகுந்த லெபனான் ஆட்சியர்களிடம் உதவி மற்றும் நிவாரணத்தொகை செல்லும் பட்சத்தில் அவை பாதிக்கப்பட்ட மக்களுக்கு சென்றடையாது என பலர் தெரிவித்தனர். 

    இதையடுத்து, நிவாரணம் மற்றும் கட்டமைப்புக்கு பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகள் வழங்கும் உதவிகள் ஊழல் செய்பவர்களின் கைகளுக்கு செல்லாமல் நேரடியாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு கிடைக்க தேவையான நடவடிக்கைகள் எடுப்பதாகவும் அதிபர் இம்மானுவேல் தெரிவித்தார்.

    லெபனான் பல ஆண்டுகளாக பிரான்ஸ் நாட்டின் காலனி ஆதிக்கத்தின் கீழ் இருந்து என்பது குறிப்பிடத்தக்கது. 

    Next Story
    ×