search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தொழிலாளர் நீதிமன்றத்தின் புதிய கட்டிடம்.
    X
    தொழிலாளர் நீதிமன்றத்தின் புதிய கட்டிடம்.

    தொழிலாளர் நீதிமன்றத்தின் புதிய கட்டிடம் இன்று முதல் செயல்படும்- நீதித்துறை தகவல்

    துபாய் அல் அவீர் பகுதியில் தொழிலாளர் நீதிமன்றத்தின் புதிய கட்டிடம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் செயல்படத் தொடங்குகிறது.
    துபாய்:

    துபாய் நீதித்துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    துபாயில் நீதிமன்றங்களுக்கு அதிகரித்து வரும் இட வசதியை கருத்தில் கொண்டு அல் அவீர் பகுதியில் நீதிமன்ற கட்டிட பணிகள் நடந்து வந்தது. தற்போது தொழிலாளர் நீதிமன்றத்துக்கு என கட்டப்பட்ட புதிய கட்டிட பணிகள் நிறைவடைந்துள்ளது.

    இதனையடுத்து தொழிலாளர் நீதிமன்றத்தின் புதிய கட்டிடம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் பயன்பாட்டுக்கு வரும். இந்த நீதிமன்றத்தில் தொழிலாளர்கள் மற்றும் அவர்கள் வேலை செய்து வரும் நிறுவனத்துக்கு இடையிலான பிரச்சினைகளை தீர்க்கும் வகையில் வழக்குகள் நடைபெறும்.

    இந்த நீதிமன்றத்தின் மூலம் தொழிலாளர்கள் செய்து கொண்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் அவர்களுக்கு தேவையான பலன்கள் கிடைப்பதில் ஏதாவது பிரச்சனை இருந்தால் அந்த பலன்களை பெற இந்த நீதிமன்றம் உறுதுணையாக இருக்கும். இதன் மூலம் தொழிலாளர்களின் உரிமைகள் நிலை நாட்டப்படும்.

    மேலும் தொழிலாளர்கள் வழக்குகள் தொடர்பான மேல் முறையீட்டு வழக்குகளும் இங்கு நடைபெறும். இந்த புதிய கட்டிடம் 5 மாடிகளைக் கொண்டதாக இருக்கும்.

    தொழிலாளர் தொடர்பான வழக்குகள் நடக்கும் வகையில் 8 அறைகள் இருந்து வருகின்றன. அப்பீல் வழக்குகளை விசாரிக்க 4 அறைகள் உள்ளன. 2 ஸ்மார்ட் அறைகள் உள்ளன. இதில் சிறைச்சாலை உள்ளிட்ட இடங்களில் இருந்து ரிமோட் முறையில் வழக்குகளை விசாரிக்கும் வகையில் வசதி செய்யப்பட்டுள்ளது.

    மேலும் நீதிமன்ற நிர்வாக பணிகளை கவனிக்க உதவும் நிர்வாக அலுவலகம், கூட்ட அரங்கு உள்ளிட்ட பல்வேறு வசதிகளும் இருக்கும் வகையில் ஏற்படுத்தப்பட்டு உள்ளது. இங்கு வரும் ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்களின் நலனை கருத்தில் கொண்டு 300 கார்கள் நிறுத்தும் வகையில் கார் நிறுத்தும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த புதிய கட்டிடம் தொழிலாளர் நீதிமன்றத்தின் பணிகள் மேலும் வேகமாக நடக்க உதவியாக இருக்கும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    Next Story
    ×