search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இலங்கை தேர்தல் வாக்குப்பதிவு
    X
    இலங்கை தேர்தல் வாக்குப்பதிவு

    இலங்கை நாடாளுமன்ற தேர்தல் 55 சதவீத வாக்குப்பதிவு - நாளை ஓட்டு எண்ணிக்கை

    இலங்கையில் இன்று நடந்த தேர்தல் வாக்குப்பதிவில் 70 சதவீதம் வாக்குப்பதிவாகி உள்ள நிலையில், நாளை காலை ஓட்டு எண்ணிக்கை நடைபெறுகிறது.
    கொழும்பு:

    இந்தியாவின் அண்டை நாடுகளில் ஒன்றான இலங்கையில்  கடந்த 2015-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடந்தது.  நாடாளுமன்றத்தின் பதவிக்காலம் முடியும் முன்பே நாடாளுமன்றத்தை கலைத்து அதிபர் கோத்தபய ராஜபக்சே உத்தரவிட்டார். அதாவது, அதிபர் கோத்தபய ராஜபக்சேவால் கடந்த மார்ச் ஒன்றாம் தேதி நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது.

    இதற்கிடையே, இலங்கையில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்ததால், 5 மாதங்களுக்கு பின்னர் பொதுத் தேர்தல் இன்று நடைபெறுகிறது.

    இந்நிலையில், நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று தொடங்கியது.  இதனை  தொடர்ந்து இலங்கையில் மொத்தமுள்ள 225 இடங்களுக்கான நாடாளுமன்ற தேர்தல் இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது.

    கொரோனா பாதிப்பு வெகுவாக குறைந்தாலும் சமூக இடைவெளி கடைபிடித்தல், முகக்கவசம் அணிதல் என பல்வேறு கட்டுப்பாடுகளுடன் பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று ஆர்வத்துடன் வாக்களித்தனர்.

    இதனிடையே, இலங்கை நாடாளுமன்ற  தேர்தல் வாக்குப்பதிவு மாலை 5 மணியுடன் நிறைவடைந்த நிலையில் 55 சதவீத  வாக்குகள்  பதிவாகியுள்ளன. தொடர்ந்து, பதிவான வாக்குச்சாவடிகளை பாதுகாக்கும் பணியில் தேர்தல் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.  

    ராஜபக்சே


    நாடாளுமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி நாளை காலை 7 மணிக்கு தொடங்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த  தேர்தலில்  ராஜபக்சே கட்சிக்கே வெற்றி வாய்ப்பு பிரகாசமாக  உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

    இலங்கையில் நடக்கும் 16 வது நாடாளுமன்ற தேர்தல் இது. இதில் அடுத்த 5 ஆண்டுகளுக்கான 225  எம்பிக்களில் 196 பேரை மக்கள் தேர்ந்தெடுக்க உள்ளனர்.

    தேர்தலில் 40 அரசியல் கட்சிகள் மற்றும் 352 சுயேட்சை என  7,452 வேட்பாளர்கள் போட்டியிட்டுள்ளனர். இம்முறை முன்னாள் அதிபர் மகிந்தா ராஜபக்சே தலைமையிலான இலங்கை பொதுஜன பெரமுனா, ரணில்  விக்கிரமசிங்கே தலைமையிலான ஐக்கிய தேசிய கட்சி, ஐக்கிய தேசிய கட்சியில் இருந்து வெளியேறிய சஜித் பிரேமதசாவின் ஐக்கிய மக்கள் சக்தி என மும்முனை போட்டி உள்ளது.
    Next Story
    ×