search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா வைரஸ்
    X
    கொரோனா வைரஸ்

    பிலிப்பைன்ஸில் மேலும் 6,352 பேர் கொரோனாவால் பாதிப்பு

    பிலிப்பைன்ஸில் இன்று மேலும் 6,352 பேருக்குக் கொரோனா பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
    மணிலா:

    சீனாவில் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வைரஸ் தற்போது உலகின் 213 நாடுகள்,  பிரதேசங்களுக்கு பரவி பெரும் மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. இந்த வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்க விஞ்ஞானிகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். ஆனாலும் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.

    இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 7 லட்சத்தை நெருங்கியுள்ளது. தற்போதைய நிலவரப்படி, 1 கோடியே 84 லட்சத்து 34 ஆயிரத்து 389 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வைரஸ் பரவியவர்களில் 60 லட்சத்து 72 ஆயிரத்து 867 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 64 ஆயிரத்து 732 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

    கொரோனாவில் இருந்து 1 கோடியே 15 லட்சத்துக்கும் அதிகமானோர் சிகிச்சைக்கு பின் குணமடைந்துள்ளனர். ஆனாலும், உலகம் முழுவதும் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 6 லட்சத்து 96 ஆயிரத்து 800 பேர் உயிரிழந்துள்ளனர்.

    இந்நிலையில் பிலிப்பைன்சில் இன்று மேலும் 6,352 பேருக்குக் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

    இதுகுறித்து பிலிப்பைன்ஸ் சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 6,352 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் பிலிப்பைன்சில் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை தற்போது 1,12,593 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா தொற்றுக்கு மேலும் 11 பேர் உயிரிழந்ததால், பலியானோர் எண்ணிக்கை 2,115 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா தொற்றில் இருந்து இதுவரை 66,049 பேர் முழுமையாக சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போது 44,429 பேர் மருத்துவமனை சிகிச்சையில் உள்ளனர்” என்று தெரிவித்துள்ளது.

    கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் வரிசையில் பிலிப்பைன்ஸ் 24வது இடத்தில் உள்ளது. உலக அளவில் கொரோனா பாதிப்பில் முதலிடத்தில் அமெரிக்காவும் (48,70,973 பேர்), இரண்டாம் இடத்தில் பிரேசிலும் (27,51,665 பேர்), மூன்றாவது இடத்தில் இந்தியாவும்(18,78,382 பேர்) உள்ளன. 
    Next Story
    ×