search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    சிரியா: அரசு ஆதரவு படையினருக்கும் கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே மோதல் - 18 பேர் பலி

    சிரியாவில் அரசு ஆதரவு படையினருக்கும் கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே நடந்த மோதலில் 18 பேர் உயிரிழந்தனர்.
    டமாஸ்கஸ்:

    சிரியாவில் 2011-ம் ஆண்டு முதல் நடைபெற்றுவரும் உள்நாட்டு போர் நடைபெற்று வருகிறது. இந்த போரில் சிரிய அரசுக்கு ரஷியா ஆதரவு அளித்து வருகிறது. அதேபோல் கிளர்ச்சியாளர்களுக்கு துருக்கி ஆதரவு அளித்து வருகிறது. 

    இதற்கிடையில் கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டில் இருக்கும் இட்லிப், அலிப்போ, ஹமா உள்ளிட்ட பகுதிகளை கைப்பற்றும் நோக்கில் சிரிய அரசு ஆதரவு படைகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். இதனால் அரசு ஆதரவு படைகளுக்கும் கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே அவ்வப்போது மோதல் நிலவி வருகிறது.

    இந்நிலையில், அந்நாட்டின் லடஹியா மாகாணத்தில் நேற்று அரசு ஆதரவு படையினருக்கும் கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே துப்பாக்கிச்சண்டை ஏற்பட்டது.

    இந்த சண்டையில் அரசு ஆதரவு படையினர் 12 பேர், கிளர்ச்சியாளர்கள் 6 பேர் என மொத்தம் 18 பேர் உயிரிழந்தனர். மேலும், இரு தரப்பிலும் 20-க்கும் அதிகமானோர் படுகாயமடைந்தனர்.

    Next Story
    ×