search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    தலிபான் துணைத்தலைவருடன் வீடியோ கான்பரன்ஸ் மூலம் பேச்சுவார்த்தை நடத்திய அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி

    ஆப்கானிஸ்தானில் அமைதி ஒப்பந்தம் குறித்து தலிபான் துணைத்தலைவருடன் வீடியோ கான்பரன்ஸ் மூலம் அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி மைக் பாம்பியோ பேச்சுவார்த்தை நடத்தினார்.
    காபுல்:

    ஆப்கானிஸ்தானில் 2001 முதல் உள்நாட்டுப்போர் நடைபெற்று வருகிறது. உள்நாட்டு போரை முடிவுக்கு கொண்டு வர அந்நாட்டு அரசின் உதவியோடு கடந்த பிப்ரவரியில் தலிபான்களுடன் அமெரிக்கா அமைதி ஒப்பந்தம் செய்துகொண்டது.

    இந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் ஆப்கானிஸ்தான் இருந்து ஆயிரக்கணக்கான அமெரிக்க படையினர் திரும்பப்பெறப்பட்டுள்ளனர். மேலும், ஆப்கானிஸ்ஸ்தான் சிறையில் இருந்து இதுவரை 4 ஆயிரத்த் 600 தலிபான்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இதற்கு பதிலாக தலிபான்களின் பிடியில் இருந்து 1,000 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

    இதற்கிடையில், பக்ரீத் பண்டிகையையொட்டி 3 நாட்கள் ஆப்கானிஸ்தானில் 3 நாட்கள் சண்டை நிறுத்தம் செய்யப்பட்டிருந்தது. மேலும் இரு தரப்பு அமைதி ஒப்பந்தத்தின் ஒருபகுதியாக நேற்றுமுன்தினம் நூற்றுக்கும் அதிகமான தலிபான் பயங்கரவாதிகளை சிறையில் இருந்து ஆப்கான் அரசு விடுதலை 
    செய்திருந்தது.

    இந்நிலையில், ஆப்கானிஸ்தான் அரசுடன் அமைதி ஒப்பந்தத்தின் படி பேச்சுவார்த்தையில் ஈடுபடுவது தொடர்பாக தலிபான் துணைத்தலைவருடன் அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி நேற்று பேச்சுவார்த்தை நடத்தினார்.

    வீடியோ கான்பரன்ஸ் மூலம் நடந்த இந்த பேச்சுவார்த்தையில் வெளியுறவுத்துறை மந்திரி மைக் பாம்பியோ தலிபான் துணைத்தலைவர் முல்லா அப்துல் ஹானி பராதருடன் அமைதி ஒப்பந்தம் தொடர்பாக முக்கிய ஆலோசனை நடத்தினார்.

    தலிபான்களும் ஆப்கானிஸ்தான் அரசும் இருதரப்பு பேச்சுவார்த்தையில் ஈடுபடுவது தொடர்பாகவும், ஆப்கானிஸ்தானின் தற்போதைய நிலவரம் குறித்தும் இந்த பேச்சுவார்த்தையில் விவாதிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

    Next Story
    ×