search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ரியோ டி ஜெனிரோவில் உள்ள மீட்பர் இயேசு சிலை
    X
    ரியோ டி ஜெனிரோவில் உள்ள மீட்பர் இயேசு சிலை

    விமானத்தில் வரும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி அளித்தது பிரேசில்

    பிரேசில் நாட்டில் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வரும் நிலையிலும், சுற்றுலாத் தொழிலை மீட்டெடுக்க வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
    பிரேசிலியா:

    கொரோனா வைரஸ் பாதிப்பில் அமெரிக்காவை அடுத்து பிரேசில் இரண்டாவது இடத்தில் உள்ளது. பிரேசில் நாட்டில் கொரோனா வைரசால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 25 லட்சத்தைக் கடந்துள்ளது. கொரோனா வைரசுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 90 ஆயிரத்தைத் தாண்டியது. 17 லட்சத்திக்கும் மேற்பட்டோர் குணமடைந்துள்ளனர்.

    வைரஸ் பரவலை தடுக்க ஊரடங்கு உத்தரவு, விமான போக்குவரத்து தடை உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதால் சுற்றுலாத்துறை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில் சுற்றுலாத்துறையை மீட்டெடுக்கும் வகையில், விமானத்தில் வரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு பிரேசில் அரசு அனுமதி அளித்துள்ளது. 

    இதுகுறித்து அரசிதழில் அரசாணை வெளியிட்டப்பட்டுள்ளது. அதில், தரைமார்க்கம் அல்லது கடல் வழியாக வரும் வெளிநாட்டு பயணிகளுக்கு கொரோனா வைரஸ் தொடர்பான தடைகள் மேலும் 30 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. ஆனால் விமானம் மூலம் வரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வருகைக்கு தடை இல்லை’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    பிரேசில் வந்து 90 நாட்கள் அல்லது அதற்கும் குறைவாக நாட்கள் தங்கியிருக்கும் வெளிநாட்டு பார்வையாளர்கள் விமானத்தில் பயணம் செய்வதற்கு முன்னர் மருத்துவக் காப்பீடு பெற்றிருக்க வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.
    Next Story
    ×