search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா நோயாளி
    X
    கொரோனா நோயாளி

    அமெரிக்காவை அச்சுறுத்தும் கொரோனா - 45 லட்சத்தை நெருங்கும் பாதிப்பு எண்ணிக்கை

    அமெரிக்காவில் ஒரே நாளில் 64 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, அங்கு கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 45 லட்சத்தை நெருங்குகிறது.
    வாஷிங்டன்:

    சீனாவின் வுகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது உலகின் 215 நாடுகளுக்கு மேல் பரவியுள்ள இந்த வைரஸ் பெரும் மனித இழப்புகளை ஏற்படுத்தி வருகிறது.

    இந்நிலையில், அமெரிக்காவில் ஒரே நாளில் மீண்டும் 64 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, அங்கு கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 45 லட்சத்தை நெருங்குகிறது.

    ஒரே நாளில் 1,237 பேர் பலியானதை தொடர்ண்டு, அங்கு கொரோனாவுக்கு சிக்கி பலியானோர் எண்ணிக்கை 1.52 லட்சத்தை தாண்டியுள்ளது. கொரோனாவில் இருந்து மீண்டவர்கள் எண்ணிக்கை 21 லட்சத்தை நெருங்குகிறது.
    Next Story
    ×