search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப்
    X
    அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப்

    அமெரிக்காவில் மருந்து பொருட்களின் விலையைக் கணிசமாக குறைக்க டிரம்ப் முடிவு

    மருந்து பொருட்களின் விலையைக் கணிசமாக குறைக்கும் நோக்கில் 4 நிர்வாக உத்தரவுகளில் கையெழுத்திட்டதாக ஜனாதிபதி டிரம்ப் தெரிவித்துள்ளார்.
    வாஷிங்டன்:

    அமெரிக்காவில் டாக்டர்களால் பரிந்துரைக்கப்படும் மருந்து பொருட்களின் விலையைக் கணிசமாக குறைக்கும் நோக்கில் 4 நிர்வாக உத்தரவுகளில் கையெழுத்திட்டதாக ஜனாதிபதி டிரம்ப் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:

    மக்களின் மருந்து செலவுகளை பெருவாரியாக குறைக்க வழி வகுக்கும் 4 நிர்வாக உத்தரவுகளில் நான் கையெழுத்திட்டேன். முதல் நிர்வாக உத்தரவின்படி சமூக சுகாதார மையங்கள் இன்சுலின் போன்ற அத்தியாவசிய மருந்து பொருட்களுக்கு பெரும் தள்ளுபடியை நோயாளிகளுக்கு நேரடியாக அனுப்ப வேண்டும்.

    இந்த உத்தரவின் கீழ் நோயாளிகளுக்கு இன்சுலின் மிகவும் குறைவான விலையில் கிடைக்கும்.

    2-வது நிர்வாக உத்தரவானது ஒரே மாதிரியான மருந்துகளின் விலைகள் குறைவாக இருக்கும் கனடா மற்றும் பிற நாடுகளிலிருந்து சட்டபூர்வமாக மருந்துகளை இறக்குமதி செய்ய அனுமதிக்கும்.

    3-வது நிர்வாக உத்தரவின் கீழ் மருந்து தயாரிப்பாளர்கள் இடைத்தரகர்கள் மற்றும் மருந்தக மேலாளர்களுக்கு வழங்கும் தள்ளுபடிகள் நேரடியாக நோயாளிகளுக்கு கிடைக்க வழி செய்யும்.

    இறுதியாக 4-வது நிர்வாக உத்தரவு மத்திய மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் பொருளாதார ரீதியாக முன்னேறிய பிறநாடுகளில் இருந்து மிகக் குறைந்த விலையில் மருந்துகளை வாங்க வழிசெய்யும்.

    இவ்வாறு டிரம்ப் கூறினார்.
    Next Story
    ×