search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாகிஸ்தான் குண்டுவெடிப்பு (கோப்புப்படம்)
    X
    பாகிஸ்தான் குண்டுவெடிப்பு (கோப்புப்படம்)

    பாகிஸ்தானில் காய்கறி வண்டியில் இருந்த குண்டு வெடித்ததில் 16 பேர் காயம்

    பாகிஸ்தானில் காய்கறி வண்டியில் வைத்திருந்த சக்தி வாய்ந்த குண்டு வெடித்ததில் 16 பேர் காயமடைந்தனர்.
    கைபர் பக்துன்குவா:

    உலக நாடுகளில் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்புகள் பாகிஸ்தானையும் விட்டு வைக்கவில்லை. இதனை தடுக்க அந்நாட்டில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு பின்பு நீக்கப்பட்டது. தொடர்ந்து பாதிப்பு உயர தொடங்கிய நிலையில், குறிப்பிட்ட பகுதிகளில் ஊரடங்கு அமலானது.

    எனினும், அந்நாட்டில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 2 லட்சத்து 67 ஆயிரத்து 400 ஆக உயர்ந்து உள்ளது. இது ஒருபுறம் இருக்க, பாகிஸ்தானில் பயங்கரவாத தாக்குதல்களும் நடந்து வருகின்றன.

    பாகிஸ்தானின் கைபர் பக்துன்குவா மாகாணத்தில் பராசினார் பகுதியில் தூரி பஜாரில் காய்கறி வண்டியில் வைக்கப்பட்டிருந்த குண்டு திடீரென வெடித்ததில் 16 பேர் படுகாயமடைந்தனர். இந்த செயலில் ஈடுபட்டவர்கள் யாரென உடனடியாக தெரியவில்லை. இதுபற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    Next Story
    ×