search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பிரேசில் அதிபர் ஜெயிர் போல்சனேரோ
    X
    பிரேசில் அதிபர் ஜெயிர் போல்சனேரோ

    3-வது முறை நடத்தப்பட்ட பரிசோதனையிலும் ’பாசிட்டிவ்’ - பிரேசில் அதிபரை விடாத கொரோனா

    கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள பிரேசில் அதிபர் போல்சோனரோவுக்கு 3-வது முறையாக மீண்டும் வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
    பிரேசிலா:

    கொரோனா ஒரு சிறிய காய்ச்சல் தான் இதற்கு ஊரடங்கு, முகக்கவசம் என எதுவும் தேவையில்லை என கூறியவர் பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சோனரோ. இவருக்கு கடந்த 10 ஆம் தேதி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

    இதையடுத்து, அவர் வீட்டில் தன்னைத்தானே தனிமைப்படுத்தி கொண்டுள்ளார். ஒரு வாரத்திற்கு மேலாக தனிமைப்படுத்திக்கொண்ட பிறகு
    கடந்த 15 ஆம் தேதி போல்சோனரோ 2-வது முறையாக கொரோனா பரிசோதனை செய்தார். அப்போதும் அவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது.

    இதனால் மேலும் சில நாட்கள் தனிமைப்படுத்திக்கொண்டு விரைவில் மீண்டும் பரிசோதனை செய்வேன் என போல்சனேரோ கூறியிருந்தார்.

    இந்நிலையில், அதிபர் போல்சனேரோ 3-வது முறையாக கொரோனா பரிசோதனை செய்துகொண்டுள்ளார். அதிலும் அவருக்கு கொரோனா மீண்டும் உறுதியாகியுள்ளது.

    அதிபர் போல்சனேரோவுக்கு நேற்று முன்தினம் 3-வது முறையாக கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. பரிசோதனையின் முடிவில் அவருக்கு மீண்டும் கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என பிரேசில் அதிபர் மாளிகை வெளியிட்ட செய்திக்குறிப்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ஆனால், அதிபர் தற்போது நல்ல உடல்நிலையுடன் இருப்பதாகவும், அவரை மருத்துவக்குழுவினர் தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும், அதிபர் போல்சனேரோ தனது பணிகளை வீடியோ கான்பிரன்ஸ் மூலமாக தொடர்ந்து கவனிப்பார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    3-வது முறை நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனையிலும் ‘பாசிட்டிவ்’ என முடிவு வந்துள்ளதால் பிரேசில் அதிபர் ஜெயிர் போல்சனேரோ சற்று கலக்கம் அடைந்துள்ளார்.

    கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது முதல் போல்சனேரோ ஹைட்ராக்சி குளோரக்குயின் மாத்திரைகளை எடுத்துவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×