search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சுற்றுலா பஸ் விபத்து
    X
    சுற்றுலா பஸ் விபத்து

    கனடாவில் தேசிய பூங்காவில் சுற்றுலா பஸ் கவிழ்ந்து 3 பேர் பலி

    கனடாவில் தேசிய பூங்காவில் சுற்றுலா பஸ் கவிழ்ந்த விபத்தில் 3 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர் மேலும் பலர் படுகாயமடைந்தனர்.
    டோரன்டோ:

    கனடாவில் அல்பெர்ட்டா மாகாணத்தில் மிகப்பெரிய தேசிய பூங்கா உள்ளது. மலைப் பிரதேசமான இங்கு பெரிய அளவில் பனிப்பாறைகள் அமைந்துள்ளன. இந்த பூங்காவிற்கு சுற்றுலா வரும் பயணிகள் வாகனங்களில் சென்று பனிப்பாறைகளை கண்டு ரசிப்பது வழக்கம். இதற்காக பூங்கா நிர்வாகத்தின் சார்பில் பிரத்தியேகமாக பஸ் இயக்கப்படுகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் இந்த பூங்காவுக்கு வந்த சுற்றுலா பயணிகள் பனிப்பாறைகளை பார்வையிடுவதற்காக பூங்கா சார்பில் இயக்கப்படும் பஸ்சில் சென்றனர்.

    மலைப்பாங்கான பகுதியில் சென்றுகொண்டிருந்தபோது பஸ் திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்தது. இதனால் நிலைதடுமாறிய பஸ் சாலையில் கவிழ்ந்து உருண்டு பள்ளத்தில் விழுந்தது. இந்த கோர விபத்தில் 3 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர் மேலும் பலர் படுகாயமடைந்தனர். அவர்கள் மீட்கப்பட்டு ஹெலிகாப்டர்கள் மூலம் ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

    விபத்தில் இறந்தவரின் குடும்பத்துக்கு இரங்கல் தெரிவித்துள்ள பூங்கா நிர்வாகம் விபத்து தொடர்பாக விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
    Next Story
    ×