search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டிரம்ப்
    X
    டிரம்ப்

    அமெரிக்காவில் சீன கம்யூனிஸ்டு கட்சி உறுப்பினர்கள் நுழைய தடை: டிரம்ப் அரசு திட்டம்

    சீனாவின் ஆளும் கம்யூனிஸ்டு கட்சி உறுப்பினர்களும், அவர்களது குடும்பத்தினரும் அமெரிக்காவில் நுழைய தடை விதிக்க டிரம்ப் அரசு திட்டமிட்டு உள்ளது.
    வாஷிங்டன் :

    சீனாவும், அமெரிக்காவும் கடந்த சில மாதங்களாக பல்வேறு பிரச்சினைகளில் மோதி வருகின்றன. சமீபத்தில் கூட கொரோனா தொற்று, ஹாங்காங் மீதான நெருக்கடி போன்ற நடவடிக்கைகளால் சீனா மீது அமெரிக்கா கடும் கோபத்தில் இருந்து வருகிறது. இது தொடர்பாக இரு நாடுகளும் மாறி மாறி பல்வேறு பதிலடிகளை மேற்கொண்டு வருகின்றன.

    இதன் தொடர்ச்சியாக சீனாவின் ஆளும் கம்யூனிஸ்டு கட்சி உறுப்பினர்களும், அவர்களது குடும்பத்தினரும் அமெரிக்காவில் நுழைய தடை விதிக்க டிரம்ப் அரசு திட்டமிட்டு உள்ளது. இதற்காக வரைவு மசோதா ஒன்று தயாரிக்கப்பட்டு உள்ளது. இந்த மசோதாப்படி சீன கம்யூனிஸ்டு உறுப்பினர்கள் புதிதாக நுழைய தடை விதிப்பதுடன், ஏற்கனவே அமெரிக்காவில் இருக்கும் உறுப்பினர்களும் வெளியேற வேண்டிய சூழல் ஏற்படும்.

    இந்த மசோதா அமலுக்கு வந்தால் சீனா-அமெரிக்கா இடையிலான பதற்றம் மேலும் அதிகரிக்கும் என நியூயார்க் டைம்ஸ் பத்திரிகை செய்தி வெளியிட்டு உள்ளது. எனினும் இந்த திட்டம் தொடர்பாக அரசு தரப்பில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியிடப்படவில்லை எனவும் அதில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
    Next Story
    ×