search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா தடுப்பூசி
    X
    கொரோனா தடுப்பூசி

    சோதனை அடிப்படையில் 3 கோடி டோஸ் கொரோனா தடுப்பு மருந்து தயாரிக்க ரஷியா திட்டம்

    முதற்கட்ட சோதனை வெற்றியடைந்ததால் 3 கோடி டோஸ் கொரோனா தடுப்பு மருந்து தயாரிக்க ரஷியா திட்டமிட்டுள்ளது.
    கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த ஒவ்வொரு நாடுகளும் தடுப்பூசி கண்டுடிபிடிக்க போராடி வருகின்றன. 100-க்கும் மேற்பட்ட தடுப்பூசிகள் பரிசோதனைகள் இருந்து வருகின்றன. இவைகள் கொரோனா தடுக்கும் வகையில் மேம்படுத்தப்படும் என்ற நம்பிக்கை உள்ளது.

    சீனா மற்றம் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் தடுப்பு மருந்துகள் மூன்றாம் கட்ட பரிசோதனையை நடத்திவிட்டன. விரைவில் நடைமுறைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்நிலையில், கொரோனா தடுப்பூசிக்கான முதற்கட்ட பரிசோதனையை வெற்றிகரமாக முடித்துள்ளது ரஷியா. 38 மனிதர்களுக்கு முதற்கட்ட மனித பரிசோதனையை மேற்கொண்ட ரஷியா நோய் எதிர்ப்பு சக்தியைத் தூண்டுவதை கண்டறிந்துள்ளது. ஆராய்ச்சியாளர்கள் பாதுகாப்பானது என்று தெரிவித்துள்ளனர்.

    ஆயிரத்திற்கும் மேற்பட்ட மனிதர்களிடையே 3-ம் கட்ட பரிசோதனையை ஆகஸ்ட் மாதம் மிகப்பெரிய அளவில் தொடங்க உள்ளதாக தெரிவித்துள்ள ரஷியா, சோதனை அடிப்படையில் 3 கோடி டோஸ் தயாரிக்கப்பட்டு உள்நாட்டில் பயன்படுத்தப்படும். அதன்பின் வெளிநாடுகளுக்கு 17 கோடி டோஸ் தயாரிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.

    ரஷியாவின் நேரடி நிதி முதலீடு தலைவர் கிரில் டிமிட்ரோவ் இதுகுறித்து கூறுகையில் ‘‘முதற்கட்ட பரிசோதனை முடிவுக்குப் பிறகு ஆகஸ்ட் மாதம் உள்நாட்டில் பயன்படுத்த ரஷியா ஒப்பதல் வழங்கும் என்றும் நம்புகிறோம். மற்ற சில நாடுகளுக்கு செப்டம்பர் மாதம் வழங்கப்படலாம். இது உலகில் அங்கீகரிக்கப்பட்ட முதல் தடுப்பூசி என்ற பெருமையை பெற வாய்ப்புள்ளது.

    2-ம் கட்ட பரிசோதனை ஆகஸ்ட் 3-ந்தேதி முடிவடைகிறது. அதன்பின் 3-ம் கட்ட பரிசோதனை உள்நாட்டிலும், இரணடு மத்திய கிழக்கு நாடுகளிலும் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது’’ என்றார்.
    Next Story
    ×